Published : Jun 16, 2023, 12:29 PM ISTUpdated : Jun 16, 2023, 12:33 PM IST
உங்கள் வீட்டில் உள்ள ரவையில் மீண்டும் மீண்டும் பூச்சிகள் வருது என்று கவலைப்படுறீங்களா? இப்பதிவில் உள்ள சில டிப்ஸ் மட்டும் பாலோ பண்ணுங்க இனி எப்போதுமே ரவையில் பூச்சிகள் வராது.
சமையலறையில் உணவு மற்றும் பானங்களை வைத்திருப்பது எளிதானது அல்ல. ஏனென்றால் பூச்சிகள், எலிகள், பல்லிகள் அல்லது கரப்பான் பூச்சிகளிடமிருந்து அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும். இல்லையெனில், நாம் பல நோய்களுக்கு பலியாகலாம். அந்தவகையில் ரவையை நாம் ஹல்வா, உப்மா, இட்லி போன்ற சுவையான உணவுகளை செய்ய பயன்படுத்துகிறோம். ஆனால் பல நேரங்களில் ரவையில் பூச்சிகள் தோன்றத் தொடங்குகின்றன. இதனால் ரவை சீக்கிரம் கெட்டுவிடுகிறது. இவ்வாறு ரவையில் சீக்கிரம் பூச்சி வருகிறது என்று கவலைப்படுறீங்களா? உங்களது கவலையை போக்க சில குறிப்புகள் இங்கு உள்ளது. அவற்றை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் இனி உங்க வீட்டு ரவையில் பூச்சி வராது. அது என்ன குறிப்புகள் என்று தெரிஞ்சுக்கலாம் வாங்க.
24
ரவையில் உள்ள பூச்சிகளை வெளியேற்ற இந்த பொருட்களை பயன்படுத்தவும்:
சூரிய ஒளி:
கொளுத்தும் வெயிலில் பூச்சிகள் தங்காது மற்றும் வெப்பத்தில் இருந்து ஓடிவிடும். இது பூச்சியிலிருந்து விடுபட பழமையான மற்றும் முயற்சித்த முறை. ரவை உள்ளிட்ட உணவுப் பொருட்களை அவ்வப்போது சூரிய ஒளியில் காட்டுவதன் மூலம் பூச்சி தொல்லையில் இருந்து விடுபடலாம்.
34
வேப்ப இலைகள்:
இது பூச்சிகளின் எதிரி என்றும் அழைக்கப்படுகிறது. வேப்பங்கொட்டையின் மருத்துவ குணங்கள் பற்றி நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. அதை நீங்கள்
பயன்படுத்தினால் ரவையில் பூச்சிகள் வராது. இதற்கு எப்பொழுதும் சில வேப்ப இலைகளை ஒரு பெட்டியில் வைக்கவும். இதனால் பூச்சிகள் வராது.
கற்பூரம்:
கற்பூரத்தைப் பயன்படுத்துவதால் ரவையில் பூச்சிகள் வராது. பூச்சிகளுக்கு கற்பூர வாசனை பிடிக்காது. எனவே, ரவையை நன்கு சலித்து, அதில் கற்பூரத்தைப் போடவும். இவ்வாறு செய்வதன் மூலமாக பூச்சிகள் ரவையில் தங்காது. அவை இறந்து விடும். புதிய பூச்சிகளும் ரவையில் உருவாகாது.