Vegetarian Food: சைவம்னு நினைச்சு சாப்பிடுறீங்களா? இந்த 5 பொருட்களும் அசைவம்தான்!

Published : Apr 08, 2026, 02:56 PM IST

விரதம் இருக்கிறவங்க கூட சில சமயம் தெரியாம அசைவ உணவுகளை சாப்பிடுறாங்க. நீங்க சைவ உணவுப் பிரியரா இருந்தா, இந்த 5 பொருட்களை சாப்பிடும்போது கவனமா இருங்க. ஏன்னா இதுல அசைவப் பொருட்கள் கலந்திருக்கு. அது என்னென்ன பொருட்கள்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

PREV
15
சர்க்கரை
நீங்க சைவமா? வெள்ளி சர்க்கரையை சாப்பிட முடியாது.!

வெள்ளை சர்க்கரை இல்லா பொருட்களே இல்லை என்றே சொல்லலாம். பரோட்டை செய்யும்போது கூட சுவைக்காக வெள்ளை சர்க்கரை சேர்க்கப்படுகிறது. டி, காபி, ஐஸ்கிரீம், ஜூஸ் மற்றும் இனிப்பு வகைகளில் வெள்ளை சர்க்கரையே பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரையை வெள்ளையாக்க 'நேச்சுரல் கார்பன்' என்ற பொருளைப் பயன்படுத்துறாங்க. இந்த கார்பனை விலங்குகளின் எலும்புகளில் இருந்து தயாரிக்கிறாங்க. அதனால, இனி சர்க்கரை பயன்படுத்தும்போது கவனமா இருங்க.

25
ஜாம் சாப்பிடுவீங்களா?

பண் பட்டர் ஜாம் எல்லோருக்கும் பிடித்த ஒரு சுவையான சினாக்ஸ் என்றால் அது மிகையல்ல. அனால் பழ ஜாம்கள் கெட்டியாக இருக்க, அதில் ஜெலட்டின் சேர்ப்பாங்க. இந்த ஜெலட்டின் விலங்குகளின் உடலில் இருந்து எடுக்கப்படும் ஒரு பொருள். அதனால், ஜாம் வாங்கும் முன் அதன் லேபிளைப் பாருங்க.

35
கடை தயிரில் என்ன சேக்கறாங்க தெரியுமா?
நீங்க சைவம்னா, தயிரை வீட்லயே செஞ்சு சாப்பிடுறது நல்லது. ஏன்னா, கடைகள்ல விற்கப்படும் சில தயிர் வகைகளில், கெட்டித்தன்மைக்காக விலங்குகளில் இருந்து எடுக்கப்படும் ஜெலட்டினை கலக்குறாங்க.
45
சமையல் எண்ணெய்யும் சாப்பிட முடியாது மக்களே.!
சில சமையல் எண்ணெய்களில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் சேர்ப்பாங்க. இந்த ஆசிட் பெரும்பாலும் மீன்களில் இருந்துதான் எடுக்கப்படுது. அதனால எண்ணெய் வாங்கும்போது லேபிளை ஒருமுறை செக் பண்ணிடுங்க.
55
மது பானங்களிலும் அசைவப்பொருள்.!
பீர், ஒயின் போன்ற பானங்களை சுத்திகரிக்க 'ஐசிங் கிளாஸ்' (Isinglass) என்ற பொருளைப் பயன்படுத்துறாங்க. இந்த பொருளை மீனின் சிறுநீர்ப்பையில் (Bladder) இருந்து தயாரிக்கிறாங்க.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories