Pillow Cleaning: வண்ண வண்ண தலையணைகள் பார்க்க அழகா இருந்தாலும், நாளடைவில் மஞ்சள் கறை பிடித்துவிடும். குறிப்பாக வெள்ளை தலையணைகளில் இது பெரும் பிரச்னை. இதற்கான காரணம் என்ன, இதை எப்படி சுலபமாக சுத்தம் செய்வது எனப் பார்க்கலாம்.
நாம் பெட்ஷீட், தலையணை உறைகளைத் தவறாமல் துவைப்போம். ஆனால், உள்ளே இருக்கும் தலையணை மட்டும் மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் மாறுவதைக் கவனித்திருப்போம். இதன் பின்னணியில் உள்ள காரணங்கள் இங்கே.
25
வியர்வை முதல் எச்சில் வரை
நாம் தூங்கும்போது, நம் சருமம் மற்றும் முடியில் இருந்து வரும் எண்ணெய், வியர்வை போன்றவை தலையணைக்குள் இறங்கும். வாயிலிருந்து வழியும் எச்சில், முகத்தில் போடும் க்ரீம், ஈரமான முடியுடன் தூங்குவது போன்றவை மஞ்சள் கறைக்கு முக்கிய காரணங்கள். நாளடைவில் இதில் பாக்டீரியா சேர்ந்து துர்நாற்றம் வீசும்.
35
எலுமிச்சை சாறும் வெயிலும் போதும்
ஒரு பங்கு எலுமிச்சை சாற்றுடன், இரண்டு பங்கு வெதுவெதுப்பான நீர் அல்லது வினிகர் கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பவும். இதை தலையணையில் ஸ்ப்ரே செய்து, சில மணி நேரம் வெயிலில் காய வைக்கவும். சூரியனின் புற ஊதா கதிர்கள் (UV rays) ஒரு நேச்சுரல் ப்ளீச் போலச் செயல்பட்டு கறைகளை நீக்கும்.
லிக்விட் டிடர்ஜென்ட்
தூள் டிடர்ஜென்ட்டை விட திரவ டிடர்ஜென்ட் தலையணையின் உள்ளே எளிதாக ஊடுருவி கறையை நீக்கும். மேலும், துவைத்த பிறகு தலையணைக்குள் சோப்புத் தூள் தங்கிவிடாமல் இருக்க வாஷிங் மெஷினில் கூடுதல் முறை Rinse செய்வது அவசியம்.
பேக்கிங் சோடாவையும் தண்ணீரையும் சம அளவில் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள். இதை கறை உள்ள இடத்தில் தடவி 30 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு, அதன் மீது சிறிது வெள்ளை வினிகரை ஊற்றித் தேய்த்து, வாஷிங் மெஷினில் துவைக்கவும். மெமரி ஃபோம் தலையணையாக இருந்தால், ஈரத்துணியால் துடைத்து வெயிலில் உலர்த்தவும்.
வெயில் உலர்த்தலில் டென்னிஸ் பந்து ட்ரிக்
தலையணையைத் துவைத்த பிறகு உலர்த்தும் போது அல்லது ட்ரையரில் போடும் போது, 2 clean டென்னிஸ் பந்துகளை (அல்லது துணியில் சுற்றிய பந்துகளை) உடன் போட்டால், தலையணைக்குள் இருக்கும் பஞ்சு/இழைகள் ஒன்றாகக் கட்டியாகாமல், பழையபடி மிருதுவாகவும் புசுபுசுவென்றும் மாறும்.
ஹைட்ரஜன் பெராக்சைடு பயன்பாடு
நாள்பட்ட அடர்ந்த மஞ்சள் கறைகளை நீக்க பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு 3% ஹைட்ரஜன் பெராக்சைடு கலக்கலாம். இது துணிகளுக்குச் சேதம் விளைவிக்காத மிகச் சிறந்த இயற்கை வெளுப்பானாக செயல்பட்டு, கறையையும் துர்நாற்றத்தையும் வேரோடு நீக்கும்.
55
மஞ்சள் கறையைத் தடுப்பது எப்படி?
வாரத்திற்கு ஒருமுறை தலையணை உறைகளைத் துவைப்பது அவசியம். 3 முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை தலையணைகளை சுத்தம் செய்யுங்கள். தலையணைக்கு உறை போடும் முன், 'பில்லோ ப்ரொடெக்டர்' (Pillow Protector) பயன்படுத்துங்கள். இது வியர்வை உள்ளே செல்வதைத் தடுக்கும். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தலையணையை மாற்றுவது நல்லது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.