Laundry Tips: வெள்ளை சாக்ஸ் கறையா? இனி கவலை வேண்டாம்... பளிச்னு மாத்த சிம்பிள் டிப்ஸ்!

Published : May 27, 2026, 11:18 AM IST

வெள்ளை நிற சாக்ஸில் படிந்திருக்கும் கறைகளை நீக்க முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? கவலை வேண்டாம். வினிகர், சமையல் சோடா போன்ற வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சாக்ஸை புதுசு போல மாற்றும் எளிய வழிகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

PREV
14
வினிகர்
அழுக்கான சாக்ஸை சுத்தம் செய்ய, ஒரு பக்கெட்டில் சுமார் 4 ஸ்பூன் வெள்ளை வினிகரை ஊற்றுங்கள். அதில் அழுக்கு சாக்ஸைப் போட்டு, இரவு முழுவதும் ஊறவிடுங்கள். காலையில் எடுத்துத் துவைத்தால், சாக்ஸ் மீண்டும் பளிச்சிடுவதைக் காணலாம்.
24
டிடர்ஜென்ட் பவுடர்
ஒரு பக்கெட்டில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, டிடர்ஜென்ட் பவுடரைச் சேருங்கள். அதில் ஒன்று அல்லது இரண்டு எலுமிச்சைப் பழங்களைப் பிழிந்து விடுங்கள். பிறகு, சாக்ஸை இந்த கலவையில் நனைத்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு இரவு முழுவதும் அப்படியே விடுங்கள். காலையில் எடுத்துத் தேய்த்தால் அழுக்கு காணாமல் போகும்.
34
ஆஸ்பிரின் மாத்திரை
தலைவலிக்கு மட்டுமல்ல, அழுக்கு சாக்ஸை சுத்தம் செய்யவும் ஆஸ்பிரின் மாத்திரை உதவுகிறது. ஆஸ்பிரின் மாத்திரை கலந்த தண்ணீரில் உங்கள் சாக்ஸை 1-2 மணி நேரம் ஊறவைத்து, பின்னர் டிடர்ஜென்ட் கொண்டு துவைத்துப் பாருங்கள்.
44
சமையல் சோடா
சமையல் சோடா ஒரு சிறந்த கிளீனிங் ஏஜென்ட். சாக்ஸில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்க, சமையல் சோடாவைப் பயன்படுத்தலாம். கொஞ்சம் தண்ணீரில் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் சமையல் சோடாவைக் கலந்து, அதில் சாக்ஸை சிறிது நேரம் ஊற வையுங்கள். பிறகு, சோப்புப் போட்டுக் கழுவினால், அழுக்கு நீங்கிவிடும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories