Old Bedsheets: நாம் நீண்ட காலம் பயன்படுத்திய பழைய பெட்ஷீட்களை வீணாக போய் விட்டது என்று தூக்கிப் போட்டு விடாதீர்கள். அதையே வீட்டு உபயோகத்துக்கு ஏற்ற பொருட்களாக மாற்றலாம். பழைய பெட்ஷீட்டை பெஸ்ட்-ஆ மாத்த 5 சூப்பர் ஐடியாஸ் குறித்து பார்ப்போம்.
நமது வீட்டில் பல மாதங்கள் பயன்படுத்திய பெட்ஷீட்கள் கிழிந்து போவதும், நிறம் மாறி மங்கி போவதும் வழக்கமான ஒன்று தான். இனிமேல் இது எதற்கு என நாம் பழைய பெட்ஷீட்டை தூக்கி போட்டு விடுகிறோம். ஆனால் அந்த பழைய பெட்ஷீட்களை வீட்டுக்குத் தேவையான பல பொருட்களாகவும் மாற்றலாம். நமக்கு காசும் மிச்சம். பழைய பெட்ஷீட்களை வைத்து என்னவெல்லாம் செய்யலாம் என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.
26
சுத்தம் செய்யும் துணிகளாக பயன்படுத்தலாம்
பழைய பெட்ஷீட்களை நீங்க துடைக்கிற துணியா பயன்படுத்தலாம். பெட்ஷீட்டை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி, வீட்டில் உள்ள ஃபர்னிச்சர், கிச்சன் மேடை, ஜன்னல்கள், கார், பைக் போன்றவற்றைத் துடைக்கப் பயன்படுத்தலாம். இதனால் கடையில் துணி வாங்கும் செலவு குறையும். குறிப்பாக, காட்டன் பெட்ஷீட்கள் தண்ணீரை நன்றாக உறிஞ்சும் என்பதால், சுத்தம் செய்வதற்கு ரொம்ப வசதியாக இருக்கும்.
36
தலையணை உறைகளாக மாற்றலாம்
பழைய பெட்ஷீட்களை வைத்து நீங்களே குஷன் கவர்கள் மற்றும் தலையணை உறைகளைத் தயாரிக்கலாம். உங்களுக்கு லேசாகத் தைக்கத் தெரிந்தால் போதும், பழைய பெட்ஷீட்களை வெட்டி, புதிய டிசைன்களில் தலையணை உறைகளைத் தைத்துவிடலாம். இது உங்கள் வீட்டுக்கு ஒரு புது லுக் கொடுக்கும். மேலும், புதிதாக உறைகள் வாங்கும் செலவும் மிச்சமாகும். கலர்ஃபுல்லான அல்லது பிரிண்டட் பெட்ஷீட்கள் இருந்தால், அவை இன்டீரியர் டெகரேஷனுக்கு அழகாக இருக்கும்.
பெரிய பெட்ஷீட்களை நீங்க திரைச்சீலைகளாகவும் (Curtains) பயன்படுத்தலாம். குறிப்பாக, வாடகை வீடுகளில் இருப்பவர்களுக்கு இது ஒரு பெஸ்ட் ஆப்ஷன். திரைச்சீலை வாங்கப் பணம் செலவழிக்காமல், பழைய பெட்ஷீட்களைப் பயன்படுத்தி உங்கள் அறைக்கு எளிதாக ஒரு புது லுக் கொடுக்கலாம். இதை ரூம் டிவைடர்களாகவும், அதாவது அறையைப் பிரிக்கவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
56
ஷாப்பிங் பைகள்
பழைய பெட்ஷீட்களை வைத்து நீங்களே ஷாப்பிங் பைகளைத் தயாரிக்கலாம். இப்போதெல்லாம் துணிப் பைகளுக்கு மவுசு அதிகமாகி வருகிறது. பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக துணிப் பைகளைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கும் நல்லது. பழைய பெட்ஷீட்களை வெட்டித் தைப்பதன் மூலம், நீடித்து உழைக்கும் துணிப் பைகளை நீங்களே உருவாக்கலாம். மேலும், சீசன் இல்லாத உடைகள், போர்வைகள் போன்றவற்றை தூசி படியாமல் பாதுகாக்க, இவற்றை ஸ்டோரேஜ் கவர்களாகவும் பயன்படுத்தலாம்.
66
பிளே மேட்ஸ்
பழைய பெட்ஷீட்களை குழந்தைகள் விளையாடுவதற்கான பிளே மேட் ஆகவும், பிக்னிக் செல்லும்போது விரிப்பாகவும் பயன்படுத்தலாம். வீட்டில் குழந்தைகள் விளையாடும் இடத்தில் தரையில் விரிப்பதற்கு இது மிகவும் வசதியாக இருக்கும். அதுமட்டுமல்ல, வீட்டில் இருக்கும் செல்லப் பிராணிகளுக்கு மென்மையான படுக்கை தயாரிக்கவும் இந்த பழைய பெட்ஷீட்கள் உதவும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.