Snake Myth: பாம்பின் மேல் பெர்ஃப்யூம் அடித்தால் ஓடிவிடுமா? உண்மை என்ன?

Published : Nov 07, 2026, 12:55 PM IST

Snake Myth: பாம்பைப் பார்த்தாலே பலரும் பயந்து ஓடுவார்கள். சிலர் எப்படியாவது அதைத் துரத்த வேண்டும் என நினைப்பார்கள். அதில் ஒன்றுதான் பாம்பின் மீது பெர்ஃப்யூம் அடிப்பது. அப்படிச் செய்தால் உண்மையிலேயே பாம்பு ஓடிவிடுமா? வாங்க பார்ப்போம்.

PREV
15
பாம்பின் மீது பெர்ஃப்யூம் அடித்தால் என்ன நடக்கும்?

வீட்டிற்குள் பாம்பு வந்துவிட்டால் போதும், எல்லோருக்கும் ஒரே பயம். அதை எப்படி வெளியே அனுப்புவது என்று யோசிப்பார்கள். இதற்குப் பலரும் பல வழிகளைச் சொல்வார்கள். அதில் ஒன்றுதான், பாம்பின் மீது பெர்ஃப்யூம் அடித்தால் அது உடனே ஓடிவிடும் என்பது. பெர்ஃப்யூம் வாசனையைத் தாங்க முடியாமல் பாம்பு சென்றுவிடும் எனச் சிலர் கூறுகின்றனர். சமூக வலைதளங்களிலும் இதுபோல வீடியோக்கள் வலம் வருகின்றன. ஆனால், உண்மையிலேயே பெர்ஃப்யூம் அடித்தால் பாம்பு ஓடிவிடுமா? இதில் உள்ள உண்மையை அறிந்துகொள்வோம்.

25
பாம்புகள் வாசனையை எப்படி உணர்கின்றன?

பொதுவாக, மனிதர்களுக்கு ஏதேனும் கடுமையான வாசனை வந்தால் உடனே தெரிந்துவிடும். ஆனால், பாம்புகள் வாசனையை உணரும் விதம் கொஞ்சம் வித்தியாசமானது. பாம்புகள் தங்கள் நாக்கை அடிக்கடி வெளியே நீட்டி உள்ளே இழுக்கும். சுற்றியுள்ள வாசனைகளையும் தகவல்களையும் தெரிந்துகொள்ளவே அவை இப்படிச் செய்கின்றன. காற்றில் மற்றும் தரையில் உள்ள சிறிய வாசனைத் துகள்களை நாக்கின் மூலம் சேகரித்து, வாயில் உள்ள ஒரு சிறப்பு உறுப்பு மூலம் உணர்கின்றன. இதன் உதவியால்தான் இரை எங்கே இருக்கிறது, அருகில் வேறு ஏதேனும் உயிரிழனம் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்கின்றன.

35
பெர்ஃப்யூம் அடித்தால் பாம்புகள் ஓடிவிடுமா?

பாம்புகளுக்கு வாசனையை உணரும் திறன் இருப்பதால், பெர்ஃப்யூம் வாசனை வந்தால் பயந்து ஓடிவிடும் என நினைப்பது எப்போதும் சரியாகாது. நமக்கு பெர்ஃப்யூம் வாசனை மிகவும் கடுமையாக தெரியலாம். ஆனால், அதே வாசனை பாம்பின் மீது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது. நிபுணர்களின் கூற்றுப்படி, பாம்பின் மீது பெர்ஃப்யூம் அடித்தால் சில நேரங்களில் அதற்குத் தீவிரமான அசௌகரியம் ஏற்படலாம். ஆனால், சில சமயங்களில் அந்த வாசனையால் கோபமடைந்து அல்லது தற்பாதுகாப்பிற்காகத் திருப்பித் தாக்கக்கூடும்.

சில சமயங்களில் பாம்பின் மீது ஏதாவது ஸ்ப்ரே செய்தால் அது உடனே அங்கிருந்து செல்வதைப் பார்த்திருப்போம். ஆனால், அதற்குக் காரணம் அந்த ஸ்ப்ரேவின் வாசனைதான் என்று சொல்ல முடியாது. பாம்பின் அருகில் மனிதர்கள் நடமாடுவது, சத்தம் எழுப்புவது, அதன் உடலில் ஏதாவது திரவம் படுவது போன்ற காரணங்களாலும் அது நகரலாம். பாம்பின் வகையையும் அங்கிருக்கும் சூழலையும் பொறுத்து அதன் நடத்தை மாறும் என்பதை மறக்கக் கூடாது.

45
பாம்பை பார்த்தால் என்ன செய்ய வேண்டும்?

பாம்பைப் பார்த்தால் அதன் மீது பெர்ஃப்யூம், பூச்சிக்கொல்லி அல்லது பிற ரசாயனங்களை அடிக்கக் கூடாது. தனக்கு ஆபத்து இருப்பதாக நினைத்தால் பாம்பு கடிக்க வாய்ப்புள்ளது. பாம்பைப் பார்த்ததும் அதன் அருகில் செல்லாமல் விலகி இருக்க வேண்டும். குழந்தைகள், செல்லப் பிராணிகள் ஆகியோரையும் அதன் அருகில் செல்ல விடக்கூடாது. பாம்பை நீங்களே பிடிக்கவோ துரத்தவோ முயற்சிக்காமல், வனத்துறை அதிகாரிகளுக்கோ பயிற்சி பெற்ற பாம்பு பிடிப்பவர்களுக்கோ தகவல் கொடுக்க வேண்டும்.

55
பாம்புகள் வராமல் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்

வீட்டுப் பகுதிகளில் பாம்புகள் வராமல் இருக்க சில முன்னெச்சரிக்கைகளை அவசியம் எடுக்க வேண்டும். வீட்டைச் சுற்றி குப்பைகள் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற செடிகள், புதர்கள் அதிகமாக வளராமல் சுத்தம் செய்ய வேண்டும். விறகுகள், கற்கள் மற்றும் பிற பொருட்களை வீட்டிற்கு அருகில் குவித்து வைக்கக் கூடாது. குறிப்பாக, எலிகள் அதிகமாக இருந்தால், அவற்றைத் தேடிப் பாம்புகள் வர வாய்ப்புள்ளது. எனவே, வீட்டில் எலிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கதவுகளுக்கு அடியில் மற்றும் சுவர்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளை அடைப்பது நல்லது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories