நீங்கள் வாங்கும் மாத்திரை தாளில் சிவப்பு கோடு மற்றும் ரகசிய குறியீடு இருந்தால் கவனமாக இருங்கள்!

Published : Feb 23, 2025, 10:45 AM IST

மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் நாம் பயன்படுத்தும் சில மாத்திரைகளில் சில ரகசிய குறியீடுகள் காணப்படுவது உண்டு. அப்படி பயன்படுத்தப்படும், குறியீடுகள் பற்றியும், அதன் அர்த்தத்தையும் இந்த பதிவில் பார்ப்போம்.  

PREV
16
நீங்கள் வாங்கும் மாத்திரை தாளில் சிவப்பு கோடு மற்றும் ரகசிய குறியீடு இருந்தால் கவனமாக இருங்கள்!
மருந்துகளில் உள்ள குறியீடுகள்:

சமீப காலமாக சின்ன தலைவலி என்றால் கூட மாத்திரையை வாங்கி போடும் பழக்கம் அதிகரித்துள்ளது. ஆனால் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மாத்திரை மற்றும் மருந்துகளை பயன்படுத்தாதீர்கள். 

ஒரு சில மருந்துகளின் , தவறான பயன்பாட்டைத் தடுக்கவும், பொறுப்பான பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாகவும் சில வகையான மாத்திரை தாளின் பின் பக்கத்தில் சில ரகசிய குறியீடுகளை, நீங்கள் பல முறை பார்த்திருப்பீர்கள். இதன் அர்த்தம் என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
 

26
மருந்து பேப்பரில் உள்ள சிவப்பு குறியீடு ஏன்?

நீங்கள் சில வகையான மாத்திரைகளை வாங்கும் போது, அதில் ஒரு செங்குத்தான சிவப்பு நிற கோட்டைக் பார்த்திருக்க முடியும். இந்த சிவப்பு கோடு ஏன் இடம்பெறுள்ளது என்பதை பற்றி யோசித்திருக்கிறீர்களா? இதன் பின்னர் சில காரணங்கள் உள்ளன. சில வகை மாத்திரை மற்றும் மருந்து பாட்டில்களில் இந்த சிவப்பு கோட்டை நாம் காணலாம். இந்த சிவப்பு நிற கோடு அச்சிடப்பட்ட, மருந்தை மருத்துவர்களில் பரிந்துரை இல்லாமல் எப்போதும் பயன்படுத்த கூடாது என்பதே இதன் அர்த்தம். 

ஆனால் இந்த சிவப்பு கோடி இல்லாமல் விற்பனை செய்யப்பட கூடிய அனாசின், பாராசிட்டமால் போன்ற மருந்துகளை மருத்தாளர்கள் உங்களுக்கு விற்பனை செய்யலாம். ஆனால் மருத்துவரின் உரிய மருந்து சீட்டு இல்லாமல், இந்த சிவப்பு கோடு போடப்பட்ட மாத்திரைகளை வாங்குவதும் விற்பனை செய்வதும் சட்டவிரோதமானது.

நீண்ட ஆயுளுடன் வாழ ஆசையா? அப்ப இந்த தவறை செய்யாதீங்க!

36
RX குறியீடு:

சிவப்பு நிற கோட்டை தொடர்ந்து, மாத்திரைக்களில் சில குறியீடுகளை நீங்கள் பார்க்க முடியும். அதில் RX என குறிப்பிட்டிருந்தால், மருத்துவர் ஒரு குறிப்பிட்ட மருந்துக்கு ஒரு மருந்துச் சீட்டை எழுதிவிட்டால், சில நாட்களுக்குப் பிறகு அதை மீண்டும் வாங்க வேண்டியிருக்கும் போது நமக்கு மருந்துச் சீட்டு தேவையில்லை. நாம் வழக்கம் போல் அவற்றை எடுத்துக் கொள்ளலாம். 

46
NRX குறியீடு:

இந்த வகை மருந்துகளில் லேசான போதை கொடுக்க கூடிய வேதிப்பொருட்கள் உள்ளன. எனவே இந்த மருந்துகளை ஒருபோதும்,  மருந்துச் சீட்டு இல்லாமல் மருதாளர் விற்பனை செய்ய கூடாது. அதே போல் மருத்துவர் பரிந்துரை செய்தது 6 மாதத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். 6 மாதத்திற்கு பின்னர் மருத்துவர் மீண்டும் பரிந்துரை செய்தால் மட்டுமே இந்த வகை மருந்துகள் கொடுக்கப்படும்.  NRX வகை குறியீடு உடைய  மருந்துகள் பெரும்பாலும், மனச்சோர்வு, மனநோய் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

மாத்திரை சாப்பிடும் போது எத்தனை டம்ளர் தண்ணீர் குடிக்கனும் தெரியுமா? அப்ப தான் நிவாரணம்!!

56
XRX குறியீடு:

XRX குறியீடு கொண்ட இந்த வகையான மருந்துகள், போதைப்பொருள் மற்றும் மனோவியல் சார்ந்த மருந்துகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த மருந்துகள் அனைத்தும் X என்ற எழுத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மருந்துகள் அனைத்தும் வலிமையான வலி நிவாரணியாகவும் மற்றும் மயக்க மருந்துகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகை மருந்து பொதுவாக புற்றுநோய் நோயாளிகள், மனநல நோயாளிகள் மற்றும் பெரிய அறுவை சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. எல்லா மருத்துவர்களும் இந்த மருந்துகளை பரிந்துரைப்பதில்லை. குறிப்பாக, மனநல மருத்துவர்கள், மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் புற்றுநோயியல் நிபுணர்கள் தான் அதிக  பரிந்துரைக்கிறார்கள். XRX வகை மறுத்து சீட்டு, பரிந்துரைக்கப்பட்ட நாளில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். மருந்தாளுநர்கள் இந்த மருந்துச் சீட்டை நோயாளியின் தகவல்களுடன் 2 ஆண்டுகளுக்கு வைத்திருக்க வேண்டும் என்பதும் கட்டாயம் என கூறப்படுகிறது. 

66
எச்சரிக்கை:

NRX மற்றும் XRX மருந்துகள் கொடுப்பதில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை, சிலர் இந்த மருந்துகளை போதைப்பொருளாக தவறாகப் பயன்படுத்துவதால் தான். மருத்துவர்கள் இந்த வகையான மருந்துகளை நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் நிறுத்தமுடியாது. அவர்கள் படிப்படியாக அவற்றை நிறுத்துவார்கள். இந்த மருந்துகளை ஒரே நேரத்தில் நிறுத்துவதும் நோயாளிகளுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடும். 

தலைவலி, காய்ச்சலுக்கு அடிக்கடி இந்த மாத்திரைகளை சாப்பிடுறீங்களா? அதிக ஆபத்து!

click me!

Recommended Stories