Amavasai thirusti:
இந்த அம்மாவாசை நாளில் நம்முடைய வீட்டில் இருப்பவர்களுக்கு கண் திருஷ்டி கழிக்கவும் மறக்க கூடாது. மாதம் ஒருமுறை வரக்கூடிய அமாவாசை நாளில், கெட்ட சக்திகளை ஒழித்து, பீடை நீங்க நம்முடைய முன்னோர்களால் செய்து வந்த பரிகாரங்கள் சிலவற்றை பார்க்கலாம்.
Amavasai thirusti:
இன்று மாலை நீங்கள் குளித்து விட்டு, பூஜை செய்யும்போது ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி, அந்த எலுமிச்சம் பழத்தில் ஒரு பக்கம் மஞ்சள், ஒரு பக்கம் குங்குமம் தடவி நிலை வாசலில் இரண்டு பக்கமும் வைக்க வேண்டும். பிறகு வழக்கம் போல உங்களுடைய அமாவாசை பூஜையை செய்து முடிக்கலாம். அமாவாசை இரவு முழுவதும் அது நிலை வாசலில் அப்படியே இருக்க வேண்டும். ஏனெனில், அது உங்கள் வீட்டில் இருக்கும் அத்தனை எதிர்மறை ஆற்றலையும் ஈர்த்து வைத்திருக்கும். ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாளில் இதே போன்று பூஜை பரிகாரங்களை செய்ய வேண்டும்.
மேலும் படிக்க..இயற்கை முறையில் கொசுவை ஓட ஓட விரட்ட இதை ட்ரை பண்ணுங்கோ...உங்கள் பணமும் மிச்சம், ஆரோக்கியத்திற்கும் 100% நல்லது
Amavasai thirusti:
இன்று இரவு அதாவது, அமாவாசை இரவு 8 மணிக்கு மேல் வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் கிழக்கு பார்த்தவாறு அமர வைத்து விடுங்கள். ஒரு முழு எலுமிச்சம் பழத்தை எடுத்து நான்கு பாகங்களாக வெட்டி விட்டு , நடுவே குங்குமம் தடவி விட்டு கல்லுப்பை நிரப்ப வேண்டும். பிறகு, அந்த எலுமிச்சம் பழத்தை கொண்டு உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சுற்றி போட வேண்டும்.
பின்னர், அந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து . ஒரு பேப்பரில் வைத்து மடித்து புதைத்து வைக்க வேண்டும். இல்லையென்றால், யார் காலிலும் படாத இடமாக தூக்கி குப்பை தொட்டியில் போட்டு விடுங்கள்.