தூங்கும்போது இதை எல்லாம் பக்கத்தில் வைச்சுக்காதீங்க! துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமாம்!

First Published | Sep 11, 2023, 2:47 PM IST

தூங்கும் போது அருகில் வைக்கக்கூடாதவை என்று சில பொருட்களைச் சொல்கிறார்கள். அவற்றை பக்கத்தில் வைத்துக்கொண்டே படுத்துத் தூங்கினால், துரதிர்ஷடம் ஏற்பட்டுவிடும் என்று கூறப்படுகிறது.

தூங்கும்போது...

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத் தூங்குவார்கள். தூங்கும்போது பக்கத்திலேயே மொபைல், தைலம், அலாரம் கடிகாரம், பர்ஸ், தண்ணீர் போன்றவற்றை வைத்துக்கொள்ளும் பழக்கம் பலருக்கும் இருக்கும். ஆனால் சில பொருட்களை அருகில் வைத்துக்கொண்டு தூங்குவது துரதிர்ஷ்டத்தை உண்டாக்கும் என்றும் என்று கூறப்படுகிறது. அந்த பொருட்கள் எதெல்லாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

பணம் மற்றும் நகைகள்

பணம் செல்வத்தின் கடவுளான மகாலெட்சுமியைக் குறிப்பதால், பணத்தை அருகில் வைத்துக்கொண்டு தூங்குவது பணத்தை அவமதிப்பதாகும் என்று சொல்கிறார்கள். இப்படிச் செய்வதால் வீட்டில் பண நெருக்கடி ஏற்பட்டு கஷ்டப்படவேண்டிய சூழல் உருவாகுமாம். இதேபோலவே தங்கம் முதலிய ஆபரணங்களையும் அருகில் வைத்துத் தூங்கக்கூடாதாம்.

Tap to resize

செருப்பு

சிலர் செருப்பை தலைக்கு அடியில் தலையணை போல வைத்துக்கொண்டு தூங்குவார்கள். அப்படிச் செய்யவே கூடாதாம். பெரியவர்கள் தலையைத் தொட்டுதான் ஆசி வழங்குகிறார்கள் என்பதால், தலைக்கு அடியிலோ அருகிலே செருப்பை வைத்துத் தூங்குவது அவர்களை அவமதிப்பதாக ஆகிவிடுமாம். இதனால், தீராத கடன் தொல்லையில் மாட்டிக்கொள்ள நேரிடுமாம்.

புத்தகங்கள்

சிலர் புத்தகத்தை தலையணை போல வைத்துக்கொள்வார்கள். அல்லது படுத்துக்கொண்டே படித்துவிட்டு புத்தகத்தை அருகில் வைத்தபடியே தூங்கிவிடுவார்கள். இப்படிச் செய்தால் மனக்குழப்பமும் தூக்கமின்மையும் ஏற்படுமாம்.

தண்ணீர்

தண்ணீரையும் தூங்கும்போது அருகில் வைத்துக்கொள்ள கூடாதாம். தண்ணீரை பக்கத்தில் வைத்துக்கொண்டு தூங்கினால், அடிக்கடி கோபம் வந்து, அதனால் பல பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடுமாம்.

Latest Videos

click me!