Diwali history: தீபாவளி எதனால் கொண்டாடப்படுகிறது..? அதன் வரலாற்று சிறப்புகள் என்ன..?

Published : Oct 18, 2022, 08:00 AM IST

Diwali history 2022: இந்தியாவில், தீபாவ‌ளி ப‌ண்டிகை ஏ‌ன் கொ‌ண்டாட‌ப்படு‌கிறது. எத‌ற்காக கொ‌‌ண்டாட‌ப்படு‌கிறது எ‌ன்பதை இந்த பதிவில் பா‌ர்‌‌ப்போ‌ம்.

PREV
16
Diwali history: தீபாவளி எதனால் கொண்டாடப்படுகிறது..? அதன் வரலாற்று சிறப்புகள் என்ன..?

தீபாவளி பண்டிகை நாட்டில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.  தீபாவளி கொண்டாடுவதன் முக்கிய நோக்கம் நரகாசுரனை கிருஷ்ணன் வதம் செய்தை நினைவு கூறும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. தீபாவ‌ளி வ‌ந்தாலே குழ‌ந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, புத்தாண்டை அணிந்து, ப‌ட்டாசு வெடி‌த்து, விதவிதமான உணவுகள் செய்து, பிறருடன் பகிர்ந்து உண்டு தங்கள் ம‌கி‌ழ்‌ச்‌சியை  வெளிப்படுத்துவார்கள்.

மேலும் படிக்க...தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி..வெறும் 5 நிமிடம் இருந்தால் போதும்..டேஸ்டியான கார அப்பம் இப்படி செய்து அசத்தலாம்.!

26

வட இந்தியாவின் இந்த நாளில் லட்சுமி தேவியை வேண்டி, மண் விளக்கு ஏற்றி, இனிப்புகளை பகிர்ந்து, பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர். மேலும், இந்த பண்டிகை ராமர் தனது பதினான்கு ஆண்டு கால வன வாசத்திற்குப் பிறகு அயோத்திக்குத் திரும்பியதைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.  

36

 

தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் படி, ராமபிரான் 14 ஆண்டுகள் வனவாசம் முடித்து,ராவணன் என்னும் அரக்கனை கொன்று மனைவி சீதையுடனும் சகோதரன் லட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நாள் நினைவாக அன்றிலிருந்து தீபாவளி மிகுந்த ஆராவாரத்துடன் கொண்டாடப்படுகிறது.

46

மறுபுறம், மக்களை துன்புறுத்தி வந்த நரகாசுரன் வதைக்கப்பட்ட தினமாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. மக்களுக்கு நரக அனுபவத்தை வழங்கிய அசுரனை, கிருஷ்ணன் வதம் செய்த நாளை, மக்கள் தங்கள் இல்லங்களில் விளக்கு ஏற்றியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடியதாகவும் கதைகள் கூறப்படுகின்றன.

 

56

தீபாவளி நாளில் லட்சுமி தேவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர். இந்த புனித நாளில் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியை வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்வதன் மூலம் எண்ணியது கிட்டும் என்பது ஐதீகம். தீபாவளி அன்று காலையில், சூரிய உதயத்திற்கு முன் எழுந்து தலைக்கு எண்ணெய் வைத்து குளித்துவிட்டு, புத்தாடைகளை அணிந்து கொள்வார்கள்.

66

பின்னர், பூஜை அறையில் லட்சுமி தேவிக்கு  ‘குத்து விளக்கு’ (விளக்கு) ஏற்றி, தெய்வங்களுக்கு ‘நைவேத்தியம்’ படைப்பார்கள். வாசலில் ரங்கோலி கோலம் போட்டு வீடுகளின் முன் தோரணம் கட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

மேலும் படிக்க...தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி..வெறும் 5 நிமிடம் இருந்தால் போதும்..டேஸ்டியான கார அப்பம் இப்படி செய்து அசத்தலாம்.!

click me!

Recommended Stories