தீபாவளிக்கு முந்தைய நாள் தந்தேரஸ் திருநாள் ..செல்வ வளம் பெருக, இந்த 5 பொருட்களை மறந்தும் கூட வாங்க வேண்டாம்..!

First Published | Oct 22, 2022, 10:58 AM IST

Diwali 2022: Dhanteras 2022: தந்தேரஸ் பண்டிகை நாட்களில், கட்டாயம் நீங்கள் வாங்காமல் தவிர்க்க வேண்டிய சில முக்கிய பொருட்களை பற்றிய அரிய ஆன்மீக தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

இன்னும் சில தினங்களில் வரவிருக்கும், தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஆம், இந்த ஆண்டு அக்டோபர் 24ம் தேதி தீபத் திருநாளாம் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் அனைவரும் தங்கள் வீட்டை சுத்தம் செய்வது, ஷாப்பிங் தொடர்பான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். லட்சுமி தேவி மற்றும் விநாயகப் பெருமானை தீபாவளி நாளில் வழிபடுகின்றனர். 

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பல விதங்களில் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். ஆம், தீபாவளிக்கு ஒரு நாள் முன்னர், அதாவது அக்டோபர் 23 ஆம் தேதி, செல்வம் மற்றும் செழுமையை பெருக்கும் தந்தேரஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் குபேரர், லட்சுமி தேவி, தன்வந்திரி ஆகியோரை வழிபடுகின்றனர். இந்த நாளில், தங்கம் மற்றும் வெள்ளி, பாத்திரங்கள் வாங்குவதற்கு ஒரு நல்ல நாளாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க ...திருணத்திற்கு பிறகு பெண்கள் செய்யக்கூடாத முக்கிய இரண்டு தவறுகள்..இதனால், உண்டாகும் பாதிப்பு என்ன தெரியுமா..?

Tap to resize

அதேபோன்று,  சில பொருட்களை நீங்கள் வாங்குவதன் மூலம் உங்களிடம் இருக்கும் மகாலட்சுமியின் அருள் நீங்கி விடுவதாக வேத சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அப்படியாக, கட்டாயம் நீங்கள் வாங்காமல் தவிர்க்க வேண்டிய சில முக்கிய பொருட்களை பற்றிய அரிய ஆன்மீக தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

நீங்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டிய ஐந்து பொருட்கள் இங்கே உள்ளன.
 
இரும்பினால் செய்யப்பட்ட பொருட்கள்

தந்தேரஸ் பண்டிகையின் போது இரும்பினால் செய்யப்பட்ட பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும். அதேபோன்று, இரும்பு சம்பந்தப்பட்ட எந்த ஒரு பொருட்களையும் மற்றவர்களுக்கு பரிசாக கொடுக்கக் கூடாது என்று வேத சாஸ்திரங்கள் எச்சரிக்கிறது. இதனால் நமக்கு துரதிருஷ்டம் வரும். மேலும், உங்கள் உறவில் பாதிப்பு உண்டாகுமாம். 

மேலும் படிக்க ...திருணத்திற்கு பிறகு பெண்கள் செய்யக்கூடாத முக்கிய இரண்டு தவறுகள்..இதனால், உண்டாகும் பாதிப்பு என்ன தெரியுமா..?

ஜோதிடர்கள் மற்றும் இந்து புராணங்களின்படி, இந்த நேரத்தில் இரும்பு மற்றும் எஃகு போன்ற பொருட்களை வாங்குவது, செல்வத்தின் கடவுளான குபேர் தனது ஆசீர்வாதங்களை பொழிவதை தடுக்கிறது என்கிறது.

கூர்மையான பொருள்கள்

கத்திகள், கத்தரிக்கோல், தையல் மெஷின், கோடாரிகள், அருவாமனை, காய்கறிகள் வெட்ட பயன்படுத்தும் எந்திரங்கள், வாள்கள், பட்டகத்தி போன்ற கூர்மையான பொருட்களை இந்த நேரத்தில் நீங்கள் வாங்க கூடாது. 

உங்கள் வீட்டில் தரித்திரம் தாண்டவம் ஆடாமல் இருக்க இந்த பொருட்களை எல்லாம் வாங்காமல்,  நிறுத்தி கொள்ளுங்கள். ஏனெனில், இத்தகைய பொருள்கள் ராகுவின் அசுப அறிகுறிகளுடன் தொடர்புடையவை என்பதால், தண்டேராஸ் பண்டிகை காலத்தில் இந்த பொருட்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அதேபோன்று, இந்த நேரத்தில் கத்தி-கத்தரிக்கோல் அல்லது கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது.
 

கருப்பு நிறம்

கருப்பு நிறம் என்பது பலருக்கும் இங்கு, பிடித்தமான வண்ணமாக இருக்கலாம். ஆனால் கருப்பு நிறத்தில் பொருட்கள் வாங்குவதை நாம் தண்டேராஸில் பண்டிகை காலத்தில் தவிர்க்க வேண்டும். 

ஏனெனில், ஜோதிடர்கள் இந்த நிறம் இருளை பிரதிநிதித்துவப்படுத்துவதால் என்பதால், துரதிர்ஷ்டத்துடன் தொடர்புடையது என்று நம்புகிறார்கள். எனவே, நீங்கள் குறிப்பாக, கருப்பு நிறத்தில் ஆடை, அணிகலன்கள், காலணிகள், பூஜை அலங்காரப் பொருட்கள் போன்றபொருட்கள் வாங்கி பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

காலியான பாத்திரங்கள்

இந்த நேரத்தில் காலியான வெற்று பாத்திரங்களை வீட்டிற்குள் கொண்டு வரக் கூடாது என்று நம்பப்படுகிறது. முதலில் எவர்சில்வர் போன்ற இரும்பு சம்பந்தப்பட்ட காலியான பொருட்களை  வாங்கி வீட்டில் கொண்டு வரக் கூடாது.  ஏனெனில், இந்த காலியான பொருட்களை நாம் வீட்டில் கொண்டு வரும் போது கஷ்டமும், துரதிஷ்டமும் நம்மிடம் ஒட்டிக்கொள்ளும் என்ற ஒரு கருத்து உண்டு. அந்த காலத்தில்  நம்முடைய முன்னோர்கள் இந்த வழக்கத்தை பின்பற்றி வந்தனர். எனவே, நீங்கள் வீட்டிற்குள் பொருட்கள் எடுத்து வரும் பொழுது தண்ணீர் நிரப்பி எடுத்து வர வேண்டும்.

கண்ணாடி:

தந்தேரஸ் பண்டிகை நாட்களில், கண்ணாடி பொருட்கள் வாங்குவது அசுப நிகழ்வாக கருதப்படுகிறது. ஜோதிடர்கள் கண்ணாடி பொருட்கள், ராகுவின் அசுப சகுனத்தில் தொடர்புடையது என்று நம்புகிறார்கள்.அதேபோன்று, இந்த நேரத்தில் கண்ணாடி திடீரென கீழே விழுந்து உடைந்தால் அந்த வீட்டில் துர் சம்பவங்கள் நிகழும் என்கிற கருத்தும் பரவலாக இருந்து வருகிறது. 

Latest Videos

click me!