தீபாவளி விடுமுறையில் குடும்பத்துடன் செல்ல ஏற்ற இடம், அதுவும் குறைந்த செலவில்! எங்கு தெரியுமா ?

First Published Oct 21, 2022, 4:05 PM IST

தீபாவளி என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகளுடன் தான் கொண்டாட பெரும்பாலோனோர் விரும்புவார்கள். ஆனால் பட்டாசுகள் இல்லாத மாசில்லா தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்று நினைப்பவர்கள் தீபாவளிக்கான விடுமுறை நாளை இயற்கையோடு கொண்டாட வேண்டும் என்று நினைப்பதுண்டு. அப்படிப்பட்ட உங்களுக்கு சில சூப்பரான இடங்களை பரிந்துரைக்கிறோம்.

கொச்சி என்பது கேரளாவில் உள்ள ஒரு தீவு நகரமாகும்.  கேரளாவில் உள்ள கொச்சி நீங்கள் தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாட நல்ல இடமாகும்.  சாகச மற்றும் சிலிர்ப்பூட்டும் விளையாட்டுகளுக்கும் கேரளா மாநிலம் பிரபலமானது ஆகும். கொச்சியில் உள்ள பல்வேறு இடங்கள், உங்கள் பட்ஜெட் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப கண்டிப்பாக இது உங்க பிடித்த பட்டியலில் நிச்சயம் இருக்கும்.

Image: Getty Images

வாட்டர் ஸ்கீயிங்: கொச்சியில் நீர் விளையாட்டு சாகசங்களில் வாட்டர் ஸ்கீயிங் முதலிடம் பிடித்துள்ளது. இங்கே, கடலின் அமைதியான அலைகளில் உங்கள் பிஸியான, வேகமான வாழ்க்கையிலிருந்து தப்பிக்கலாம். சிறந்த அம்சம் என்னவென்றால், விளையாட்டு பாதுகாப்பானது, ஏனெனில் இது அனைத்தும் நிபுணர்களின் கண்காணிப்பின் கீழ் இயங்குவதால், பாதுகாப்புக்கு பிரச்னை ஏதும் இல்லை.

Image: Getty Images

ஸ்கூபா டைவிங்: கொச்சியில் உள்ள மிகவும் பிரபலமான சுற்றுலா அம்சங்களில் ஸ்கூபா டைவிங் ஒன்றாகும். ஸ்கூபா டைவிங் செய்ய நீச்சல் நன்றாக தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இங்கே நீங்கள் நீர்வாழ் உயிரினங்களை கண்டு மகிழலாம். புகைப்படம் எடுக்கலாம். சுமார் 45 நிமிடங்கள் நடைபெறுகிறது இந்த பயிற்சி. கொச்சியில் கட்டாயம் செய்ய வேண்டிய சாகச விளையாட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.

Image: Getty Images

கயாக்கிங்: கயாக்கிங் ஆனது தற்போது கொச்சியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. கடல் பகுதிகளை நன்றாக சுற்றிபார்ப்பதற்கு நல்ல சாகச விளையாட்டு ஆகும்.இது ஒருவரின் உடல் நிலை மற்றும் துடுப்பு செலுத்துவதை முதன்மையாக கொண்டதாகும்.

Image: Getty Images

வாழைப்பழ படகு சவாரி: இந்த வேடிக்கையான பொழுதுபோக்கு அம்சத்தை தனித்தனியாகவும் அல்லது குழுவாகவும் செய்யலாம். இது கொச்சியின் சிறந்த சாகச விளையாட்டுகளில் ஒன்றாகும். இது 5 நிமிடங்கள் மட்டுமே. இருப்பினும், இந்த ஐந்து நிமிடங்களில், வாழைப்பழ வடிவிலான படகுகளில் அதிவேகமாக அலைகளின் மீது பாய்ந்து செல்லும் போது, ​​நீங்கள் உற்சாகமான அதே நேரத்தில் சாகச உணர்வை அனுபவிப்பீர்கள்.

click me!