காப்பர் vs ஸ்டீல் பாட்டில் : தண்ணீர் குடிக்க எது பெஸ்ட்!

Published : Mar 12, 2025, 11:36 AM IST

ஆரோக்கியமாக இருக்க காப்பர் அல்லது ஸ்டீல் இவை இரண்டில் எந்த பாட்டிலில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று இங்கு காணலாம்.

PREV
16
காப்பர் vs ஸ்டீல் பாட்டில் : தண்ணீர் குடிக்க எது பெஸ்ட்!

Copper Bottle vs Steel Bottle : தண்ணீர் நம்முடைய ஆரோக்கியத்திற்கு ரொம்பவே முக்கியம். ஆனால் அதை சரியாக குடிக்கும் முறையும் மிகவும் அவசியம். ஆம் நாம் தினமும் குடிக்கும் தண்ணீர் பாட்டில் சரியாக தேர்ந்தெடுக்காவிட்டால் உடல் ஆரோக்கியம் தான் கணிசமாக பாதிக்கப்படும். அந்த வகையில் சமீபத்திய ஆண்டில், காப்பர் மற்றும் ஸ்டீல் பாட்டில்களின் தரம் மற்றும் சுகாதார நன்மைகள் காரணமாக மிகவும் பிரபலமாக உள்ளன. ஆனால் இந்த இரண்டு பாட்டில்களில் எதில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. காப்பர் மற்றும் ஸ்டீல் இரண்டுமே அவற்றின் சொந்த நன்மைகளை கொண்டிருந்தாலும், இவை இரண்டில் தண்ணீர் குடிப்பதற்கு எது சிறந்தது என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

26
காப்பர் பாட்டில் நன்மைகள்:

ஆயுர்வேத கண்ணோட்டத்தின் படி காப்பர் பாட்டில் மிகவும் நன்மை பயக்கும் என்று சொல்லப்படுகிறது ஏனெனில், காப்பர் தண்ணீரானது இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை பெறுகிறது. காப்பர் பாக்டீரியா மற்றும் தீங்கு விளைவுக்கும் கூறுகளை அளிக்க பெரிதும் உதவுகிறது. காப்பர் தண்ணீரை குடித்தால் செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது தவிர உடலில் இருந்து காப்பர் தண்ணீர் நச்சுக்களை வெளியேற்ற முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் செம்பு நீரில் ஆகஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளதால் அவை உடல் செல்களை பாதுகாக்கவும் மற்றும் வயதான செயல்முறையை மெதுவாக்கவும் உதவுகின்றது. இது தவிர இந்த நீரானது தைராய்டு சுரப்பியின் சமநிலையை பராமரிக்கவும், ஹார்மோன் சமநிலையின் மேம்படுத்தவும் உதவும். இது நேர்மையான விளைவானது மன ஆரோக்கியத்தையும் காணப்படுகின்றது.

36
காப்பர் பாட்டிலை பயன்படுத்தும் முறை:

காப்பர் பாட்டிலை முறையாக பயன்படுத்த வேண்டுமானால், குறைந்தபட்சம் அதில் 6 முதல் 8 மணி நேரம் தண்ணீர் இருக்க வேண்டும். அப்போதுதான் காப்பர் தண்ணீரின் முழுமையான ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும். இருப்பினும் எப்போதுமே சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதற்கு அவ்வப்போது அதை எலுமிச்சை, உப்பு அல்லது வினிகர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இதனால் பாட்டில் உள்ளே அழுக்குகள் சேராது. அதுபோல பாட்டிலை நன்கு காய வைத்து பிறகு தான் பயன்படுத்த வேண்டும்.

இதையும் படிங்க:  காப்பர் பாட்டில் யூஸ் பண்றீங்களா? அப்போ இத படிங்க! இல்லைனா டேஞ்ஜர்

46
ஸ்டீல் பாட்டில் நன்மைகள்:

சுகாதார கண்ணோட்டத்தின் படி, துருப்பிடிக்காத ஸ்டீல் பாட்டில் ஒரு சிறந்த தேர்வாக கருதப்படுகிறது. ஸ்டீல் பாட்டிலில் எந்த வித தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களும் இல்லை. மேலும் தண்ணீரின் சுவை அல்லது தாரத்தை இந்த பாட்டில் ஒருபோதும் பாதிக்காது. ஸ்டீல் பாட்டில் துருப்பிடிக்காது, வலிமையானது பாதுகாப்பானது மற்றும் நீடித்தது. இன்னும் சொல்லப்போனால் இந்த பாட்டில் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யக்கூடியது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது.

இதையும் படிங்க:  வெந்நீர் வைச்சு ஸ்டீல் பாட்டில் இப்படி இருக்கா? எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்க!!

56
ஸ்டீல் பாட்டில் பயன்படுத்தும் முறை:

ஸ்டீல் பாட்டில்கள் சுத்தம் செய்வது ரொம்பவே எளிது. இது கறைகள் மற்றும் துர்நாற்றங்களை அதிக ஈர்ப்பு திறன் கொண்டவையாகும். இதில் காப்பு பொருட்களை கொண்டுள்ளதால் இது நீண்ட நேரம் குளிர்ச்சியாக அல்லது சூடாக வைத்திருக்கும். இருப்பினும் சில ஸ்டீல் பாட்டில்களில் நிக்கல் உள்ளதால், சிலருக்கு இது ஒவ்வாமையை ஏற்படுத்தும். எனவே ஸ்டீல் பாட்டில் வாங்கும்போது பார்த்து வாங்கவும்.

66
காப்பர் vs ஸ்டீல் பாட்டில் : எது சிறந்தது?

நீங்கள் ஆயுர்வேத நன்மை மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை விரும்புகிறீர்கள் என்றால், காப்பர் பாட்டில் உங்களுக்கு பெஸ்ட். இது உடலை நச்சு நீக்கம் செய்யவும், செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவும். இருப்பினும் இதை முறையாக சுத்தம் செய்து பராமரிப்பது ரொம்பவே முக்கியம். அதேசமயம் நீங்கள் ஒரு வலுவான நீடித்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பாட்டிலை விரும்பினால் ஸ்டீல் பாட்டில் சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில் இதற்கு குறைந்த பராமரிப்பு மட்டுமே தேவைப்படுகிறது மற்றும் நீண்ட நாள் பயன்படுத்தலாம். இறுதியாக, இரண்டு பாட்டிலும் அவற்றின் சொந்த நன்மைகளைக் கொண்டுள்ளதால் உங்களது தேவைகளின் அடிப்படையில் சரியான பாட்டிலை தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories