காதில் உள்ள அழுக்கை பட்ஸ் இல்லாம அகற்றலாம் தெரியுமா? பலருக்கு தெரியாத ட்ரிக்!

Published : Mar 11, 2025, 11:37 AM IST

 காதில் உள்ள அழுக்கை பட்ஸ் இல்லாமல் வெளியே எடுப்பது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

PREV
15
காதில் உள்ள அழுக்கை பட்ஸ் இல்லாம அகற்றலாம் தெரியுமா? பலருக்கு தெரியாத ட்ரிக்!

Ear Wax Removal Tips : பொதுவாக நம் அனைவரும் காட்டன் பட்ஸை வைத்து தான் காதில் உள்ள அழுக்கை வெளியே எடுப்போம். ஆனால் அப்படி பட்ஸை வைத்து அழுக்கெடுப்பது காதுக்கு தான் ஆபத்து என்று உங்களுக்கு தெரியுமா? ஏனெனில் நீங்கள் பட்ஸை பயன்படுத்தும்போது காதுக்குள் இருக்கும் அழுக்கானது உள்ளே தழும்பு அபாயம் ஏற்படும். இதனால் அவை காதுகளை அடைத்துக் கொள்ளும். பிறகு காது கேளாண்மைக்கு வழிவகுக்கும். எனவே இது போன்ற சங்கடங்களை தவிர்க்க எளிய முறையில் காதுக்குள் இருக்கும் அழுக்கை சுலபமாக வெளியேற்றி விடலாம். அது எப்படி என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

25
காது மெழுகு ஏன்?

காதில் இருக்கும் மெழுகை சுத்தம் செய்வதற்கு முன் முதலில் காதில் மெழுகு ஏன் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். சருமம் என்று அழைக்கப்படுகிறது. இது தூசி குப்பைகள் மற்றும் பாக்டீரியாக்களில் இருந்து நம்முடைய காதை பாதுகாக்க, நம்முடைய காது கால்வாயில் உள்ள சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படுகின்றது. அரிப்பு மற்றும் வறட்சியை தடுக்க இந்த காது கால்வாய் பராமரிக்க இது பெரிதும் உதவுகிறது.

35
காது மெழுகு அடைப்பிற்கான அறிகுறிகள்

 - ஒரு காது வலி ஏற்படும்
- பாதிக்கப்பட்ட காதானது நிரம்பிய உணர்வு ஏற்படும்.
- காதில் சத்தம் கேட்பது
- பாதிக்கப்பட்ட காதானது கேட்கத்திறன் குறைவு

இதையும் படிங்க:  நம் காதுகள் பற்றிய இந்த சுவாரஸ்யமான விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா..?

45
எண்ணெய்

ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், பேபி ஆயில், மினரல் ஆயில் மற்றும் கிளிசரின் கூட பயன்படுத்தலாம். இதற்கு முதலில் ஒரு பக்கமாக தலையை சாய்த்து பிறகு ஏதாவது எண்ணெய் இளஞ்சூட்டில் இருக்கும் போது அதன் சில துளிகளை காதுக்குள் விட வேண்டும். 15 நிமிடங்கள் தலையை அப்படியே வைத்திருக்கவும். எண்ணெய் காதுக்குள் இருக்கும் மெழுகை மென்மையாக்கி இயற்கை முறையில் வெளியே வர உதவும்.

இதையும் படிங்க:  காதுக்குள் தண்ணீர் போய் விட்டால்...ஈஸியாக வெளியேற்ற இதோ வழிகள்

55
சூடான நீர்

சூடான நீரும் காதுக்குள் இருக்கும் மெழுகை வெளியேற்ற உதவும். இதற்கு ஒரு சிரிஞ் ஒன்றில் அறை வெப்பநிலையில் தண்ணீரை நிரப்பி தலையை சாய்த்து ஒரு பக்கமாக காதினுள் தண்ணீரை ஊற்றவும். தண்ணீரானது காதுக்குள் இருக்கும் மெழுகை மென்மையாக்கும். பிறகு காதை எதிர் திசையில் சாய்த்தால் மெழுகு வெளியேறும். பின் துண்டை கொண்டு காதை மெதுவாக துடைக்க வேண்டும்.

நினைவில் கொள் : காதும் மெழுகை நீக்க பேனா மூடி, ஊசி, விரல், ஊக்கு, பட்ஸ் போன்ற பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories