காரணமின்றி அதிக சோர்வு, எரிச்சல் வருகிறதா? இது ரத்தசோகையின் அறிகுறியாக இருக்கலாம்: மருத்துவர்கள் எச்சரிக்கை!

Published : Nov 18, 2026, 04:32 PM IST

உடல் சோர்வு, எரிச்சல், கவனச்சிதறல் ரத்தசோகையின் அறிகுறிகளா? ரத்தசோகைக்கான காரணங்கள், பரிசோதனைகள் மற்றும் அதைத் தடுக்கும் உணவு முறைகள் குறித்து நிபுணர்கள் கூறும் முக்கியத் தகவல்கள் இதோ.

PREV
14
ரத்தசோகை & மனச்சோர்வு அறிகுறிகள்

அதிகப்படியான சோர்வு, எரிச்சல் மற்றும் கவனச்சிதறல் ஆகியவற்றை நாம் அன்றாடப் பணிச்சுமையின் விளைவு என்று சாதாரணமாகக் கடந்துவிடுவோம். ஆனால், இவை ரத்தசோகை (Anaemia) போன்ற மறைந்திருக்கும் உடல்நலப் பிரச்சனையின் அறிகுறிகளாக இருக்கலாம்.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் (NFHS-5) படி, இந்தியாவில் 15-49 வயதுக்குட்பட்ட பெண்களில் 57%-த்தினரும், 15-19 வயதுக்குட்பட்ட வளரிளம் பெண்களில் 59.1%-த்தினரும் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது.

24
ரத்தசோகை ஏன் ஏற்படுகிறது & அதன் அறிகுறிகள் என்ன?

ரத்த சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் அளவு இயல்பை விடக் குறையும்போது, உடல் உறுப்புகளுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் திறன் குறைந்து ரத்தசோகை ஏற்படுகிறது.

முக்கிய அறிகுறிகள்:

உடல் பலவீனம் மற்றும் தலைச்சுற்றல், மூச்சுத் திணறல் மற்றும் தலைவலி, வெளிறிய சருமம், கை, கால்கள் குளிர்ச்சியாக இருத்தல், வேகமான அல்லது சீரற்ற இதயத் துடிப்பு, இந்த பாதிப்பு குழந்தைகளின் கற்றல் திறனையும், பெரியவர்களின் அலுவலக வேலை மற்றும் தனிப்பட்ட உறவுகளையும் கடுமையாகப் பாதிக்கும்.

34
காரணங்கள் & பரிசோதனைகள்

இரும்புச்சத்து, வைட்டமின் பி12 அல்லது ஃபோலேட் குறைபாடு, அதிகப்படியான மாதவிடாய் ரத்தப்போக்கு, அல்சர், கொக்கிப்புழு தொற்று, சிறுநீரக நோய் மற்றும் தலசீமியா போன்ற பரம்பரைக் கோளாறுகளால் ரத்தசோகை ஏற்படலாம். எனவே, 'கம்ப்ளீட் பிளட் கவுண்ட்' (CBC) மற்றும் பிற ரத்தப் பரிசோதனைகள் மூலம் சரியான காரணத்தைக் கண்டறிவது அவசியம்.

44
ரத்தசோகையைத் தடுக்கும் உணவு முறைகள்:

இரும்புச்சத்து உணவுகள் - பருப்பு வகைகள், பீன்ஸ், கீரைகள், நட்ஸ் மற்றும் இறைச்சியை உணவில் சேர்க்க வேண்டும்.

வைட்டமின் பி12 & ஃபோலேட் - இலைக் காய்கறிகள் மற்றும் பயறு வகைகளை உண்ண வேண்டும்.

வைட்டமின் சி சேர்க்கை - உடலில் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதை அதிகரிக்க நெல்லிக்காய், கொய்யா மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

டீ, காபியைத் தவிர்க்கவும் - உணவு உண்ணும்போது உடனடியாக டீ அல்லது காபி குடிப்பது இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதைத் தடுக்கும் என்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories