
ஜீன்ஸ் ஆண் பெண் பேதம் இல்லாமல் எல்லோரும் பயன்படுத்தும் ஆடை. இதை சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை எல்லோரும் அணிவார்கள். ஜீன்ஸை மற்ற ஆடைகளை போல அடிக்கடி துவைக்க தேவையில்லை. இரண்டு அல்லது மூன்று முறை போட்டுவிட்டு துவைத்தால் போதும். இதற்கிடையே அதனை உள்பக்கமாக மாற்றி வைத்து வியர்வை போன்ற ஈரப்பதம் போகும் அளவு காய வைக்க வேண்டும். இது அந்த ஆடையின் சிறப்பில் ஒன்று.
மற்றொன்று என்னவெனில் ஜீன்ஸின் பாக்கெட்டில் செம்பு அல்லது தாமிரம் அல்லது காப்பர் (copper) பட்டன்கள் இருப்பது தான். நீங்கள் எந்த ஜீன்ஸில் வேண்டுமானாலும் செப்பு பட்டனை பார்க்கலாம். ஜீன்ஸில் பிளாஸ்டிக் அல்லது இரும்பு பட்டன்கள் வைக்காமல் ஏன் செம்பு பட்டன் வைக்கிறார்கள் என்று எப்போதாவது யோசனைச் செய்துள்ளீர்களா? அதற்கான பதிலை இங்கு காணலாம்.
இந்த நவீன யுகத்தில் ஜீன்ஸ் அணிவது சாதரணமாகிவிட்டது. ஒரு ஜீன்ஸ் வாங்கிவிட்டால் பல சட்டைகளுக்கோ, சுடிதார் டாப்களுக்கோ அதை பயன்படுத்தி கொள்ளலாம். இது பல்வேறு டிசைன்களில் இப்போது கிடைக்கிறது. ஜீன்ஸில் பெல் பாட்டம், டைட், ஸ்ட்ரெய்ட், ஸ்கின்னி, ரிப்ட், ஃபேட் போன்றவைகள் எப்போதும் அதிகம் வாங்கப்படும் ஜீன்ஸ்கள்.
இதையும் படிங்க: இரவில் ஜீன்ஸ் அணிந்து தூங்கினால் உடலில் என்னென்ன மாற்றம் வரும் தெரியுமா?
இந்த ஜீன்ஸில் பொதுவாக காணப்படுவது அதன் பாக்கெட்டுகளில் உள்ள செப்பு பட்டன்கள் தான். ஜீன்ஸை மாட்ட கொடுக்கப்பட்டுள்ளவைகளும் செப்பு தான். முதல் முறை ஜேக்கப் டேவிஸ் என்பவர் தான் ஜீன்ஸை வடிவமைத்தார். 19 ஆம் நூற்றாண்டில், டேவிஸ் விவசாயிகளுக்காக தான் ஜீன்ஸ் என்ற ஆடையை வடிவமைக்கவே செய்தார்.
அந்த காலத்தில் விவசாய நிலத்தில் இறங்கி கூலி வேலை செய்பவர்களின் வேலை தான் கடினமானது. நிலத்தில் கடுமையாக வேலை செய்வதால் அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் அடிக்கடி கிழிந்தன. எல்லா சமயங்களிலும் அவர்களால் புது ஆடைகளை வாங்க முடியவில்லை. இதைத் தவிர்க்க நினைத்த டேவிஸ், சீக்கிரம் கிழிக்காத துணியால் ஜீன்ஸ் என்ற ஆடையை தயாரித்தார். அது டெனிம் துணியால் செய்யப்பட்டது.
இந்த பேண்டில் அதிக பாக்கெட்டுகள் வைக்க முடிவு செய்தனர். ஆனால் அழுத்தம் அதிகமாக இருந்தால் பேண்ட் கிழிந்துவிடும். இதை தவிர்க்க அதிக அழுத்தம் ஏற்படும் இடங்களில் பாக்கெட்டுகளை தனியாக வைத்து அதனை இணைக்க, காப்பர் பட்டன்களை வைத்துள்ளனர். இதை பயன்படுத்த பல காரணங்கள் இருந்தன. முதலாவதான காரணமாக நிலைத்தன்மையை எடுத்து கொள்ளலாம். காப்பர் உறுதியான உலோகம் என்பதால் அந்த வகை பட்டன் வைத்த ஜீன்ஸ் அதிக காலம் நீடித்தது.
இதையும் படிங்க: துவைக்காத அழுக்கு ஜீன்ஸ் பேன்ட்டை எத்தனை நாட்கள் அணியலாம்?
அதுமட்டுமின்றி துணியின் பல்வேறு பகுதிகளை உறுதியாக்க காப்பர் பட்டன்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால் பேண்ட்கள் எளிதில் கிழியவில்லை. இவை வெறுமனே ஆடைகளை உறுதியாக்குவது மட்டுமின்றி கவர்ச்சியான தோற்றத்தையும் தரும். காப்பர் பட்டன்கள் தான் ஜீன்ஸுக்கும் ஒரு அட்டகாசமான தோற்றத்தை அளித்தன.