CM Vijay உத்தரவு : மஞ்சும்மல் பாய்ஸ் போன இடத்துக்கு நீங்க Free-ஆ போலாம்

Published : May 25, 2026, 11:40 AM IST

CM Vijay உத்தரவு : கொடைக்கானலில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடங்களை மே 31-ஆம் தேதி வரை இலவசமாக பார்வையிடலாம் என்று வனத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. 

PREV
14
கொடைக்கானலில் அலை மோதும் மக்கள் கூட்டம்

கோடை வெயிலிலில் இருந்து தப்பிக்கும் பொருட்டு சென்னை போன்ற வெப்பம் அதிகமாக உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் தங்களுடைய குடும்பங்களுடன் மலைப்பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த முறையும் கொடைக்கானலில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

24
CM விஜய் உத்தரவு

இந்நிலையில், போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் விதமாகவும், பொதுமக்கள் எளிதாக பல்வேறு இடங்களுக்கு சென்று வருவதற்கு எதுவாகவும், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை இலவசமாக பார்வையிட, முதல் அமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் வனத்துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

34
எந்தெந்த இடங்கள் இலவசம்?

இதன்படி, கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களான தூண் பாறை, மோயர் சதுக்கம், ஃபைன் மரக்காடுகள் உள்ளிட்டவற்றை நுழைவுக்கட்டணமின்றி மக்கள் இலவசமாக பார்வையிடலாம் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

44
மஞ்சும்மல் பாய்ஸ் புகழ் 'குணா குகை'!

இவற்றில், கமலின் குணா படத்தன் மூலம் பிரபலமான ‘டெவில்ஸ் கிச்சன்’ பகுதியும் அடங்கும். அதோடு, மஞ்சும்மல் பாய்ஸ் படம் வெளிவந்த பின்னர் இன்றைய இளைஞர்களின் சென்சேஷனாக குணா குகை திகழ்ந்து வருகிறது. இந்தப் பகுதியை இலவசமாக சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு வரவேற்கத்தக்கது என்ற அதேவேளை, பொதுமக்கள் கவனமுடனும், பொறுப்புடனும் சுற்றிப்பார்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories