சீனாவில் தொடங்கிய கொரோனா பீதி இப்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இந்நிலையில் தனது நாட்டை காப்பதற்காக தங்களது உயிரை பணயமாக வைத்து ஆயிரக்கணக்கான சீன செவிலியர்களும், மருத்துவர்களும் கொரோனா என்ற அரக்கனை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறார். சீனாவில் உள்ள மருத்துவமனையிலேயே செவிலியர்கள் ஓய்வெடுக்கும் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி, பார்ப்பவர்கள் மனதை கலங்கடிக்கச் செய்தது. இந்நிலையில், சீன செவிலியர்களின் புகைப்படங்கள் வெளியாகி உலக மக்கள் மத்தியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மகளிர் தினத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாது போராடும் செவிலியர்கள் மற்றும் பெண் மருத்துவர்களை நினைவு கூறும் ஒரு புகைப்பட தொகுப்பு...!