
சைவ உணவை சாப்பிடுபவர்களை விட அசைவ உணவுகளின் மீது தான் பலருக்கும் விருப்பம். அதுவும் குறிப்பாக சண்டே வந்தாலே கண்டிப்பாக எல்லோருடைய வீடுகளிலும் அசைவம் தான் இருக்கும். சில பேர் சைவ உணவு என்றாலே செய்யும் வேலையை கூட மறந்து விடுவார்கள்.
அசைவ உணவுகளில் மீன், முட்டை, சிக்கன், மட்டன், காடை, நண்டு, இறால் என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அந்தவகையில், சிக்கன் அல்லது மீன் இந்த இரண்டில் எது உண்மையில் ரொம்பவே ஆரோக்கியமானது? அதற்கான பதிலை பற்றி இந்த பதிவில் நாம் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
சிக்கன் நன்மைகள்:
சிக்கன் புரதங்களின் சிறந்த மூலமாகும். இது உடல் வளர்ச்சிக்கும், செயல் திறனுக்கும் பெரிதும் உதவுகிறது. ஆனால் சிக்கனை அதிகளவு எடுத்துக்கொள்ள கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதிலும் குறிப்பாக பிதாய்லர் கோழி வகைகளை முடிந்த வரை தவிர்க்கவும். அதற்கு பதிலாக நீங்கள் நாடுக்கோழி சாப்பிடுங்கள். அது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.
முக்கியமாக எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஆட்டிறச்சி, மாட்டிறச்சியைக் காட்டிலும் சிக்கன் தான் பெஸ்ட். இதுதவிர, நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்க்கான குறைந்த அபாயத்தைக் கொண்டுள்ளது.
அதுபோல கோழியின் மார்பகம் வைட்டமின் பி3-ன் நல்ல மூலமாகும். கோழியின் தொடை மற்றும் முட்டிப் பகுதியில் துத்தநாகம், செசிலினியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
மீன் நன்மைகள்:
பொதுவாக கடல் உணவுகள் அதிக சத்து மிகுந்தவை. இதில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் காணப்படுகின்றன. தசைகளை வலுவாக்கும் புரதச்சத்து, கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ ஆகியவையும் நிறைந்து காணப்படுகிறது. இந்த உணவுகளை வாரத்தில் இரண்டு தடவை சாப்பிட்டாலும், உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும்.
கடல் மீனை உண்பதால் மூளையின் செயல்பாடு மேம்பாடு அடையும். கண் பார்வை கூர்மையாக இருக்க மீன் சாப்பிடுவது அவசியமாக கருதப்படுகிறது. புற்றுநோய் வருவதற்கான அபாயத்தை கடல் உணவுகள் குறைக்கின்றன. கடல் உணவுகளை அடிக்கடி உண்ணும் போது எலும்புகளின் தேய்மானம் குறைக்கப்படுகிறது. நல்ல உறக்கம் கிடைப்பதும் கடல் உணவுகளின் மற்றுமொரு சிறப்பு.
மீன்- சிக்கன்.. எது சிறந்தது?
சிக்கன், மீன் ஆகிய இரண்டு உணவுகளும் வெவ்வேறு வகையான சத்துக்களை கொண்டுள்ளன. இரண்டுமே உடலுக்கு ஆரோக்கியமான பலன்களை தான் கொடுக்கின்றன. இதில் எது சிறந்தது என்று சொல்வது சற்று கடினம். கோழி இறைச்சியில் இரும்புச்சத்து, துத்தநாகம், செலினியம் ஆகியவை உள்ளன.
மீனில் கால்சியம், பாஸ்பரஸ், ஒமேகா -3 போன்றவை அதிகமுள்ளன. சிக்கன், மீன் ஆகிய இரண்டுமே புரதச்சத்துகளை உடையது. உங்களுக்கு என்ன மாதிரியான நன்மைகள் அதிகம் வேண்டுமோ அந்த உணவினை அடிக்கடி எடுத்து கொள்ளுங்கள். மற்றொன்றை அவ்வப்போது உண்ணுங்கள். மீன், சிக்கன் இரண்டுமே சத்தானது தான். தேவைகளை பொறுத்து அதனை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.