சமூக வலைதளங்களில் மணிக்கணக்கில் ரீல்ஸ் பார்ப்பது மற்றும் 'டூம்ஸ்கிரோலிங்' செய்யும் பழக்கத்தால் மூளையும் கவனமும் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை பற்றி பார்போம்.
சமூக வலைதளங்களில் நம்மை தொலைபேசியில் இருந்து விடுவிக்க மற்றொரு வைரல் டிரெண்ட் வந்துள்ளது. இது அழகாகவும், ASMR வீடியோ போன்ற ஈர்ப்பைக் கொண்டிருப்பதுடன், உண்மையில் உங்களுக்கு உதவக்கூடும். நேரத்தைப் பார்ப்பதற்காக நீங்கள் உங்கள் மொபைலை எடுத்திருப்பீர்கள். ஆனால், 40 நிமிடங்களுக்குப் பிறகு, சியோலில் (Seoul) ஒரு நபர் என்ன சாப்பிட்டார் என்பது உங்களுக்குத் தெரியும், எல்லாரும் எந்தப் பாடலுக்கு நடனமாடுகிறார்கள் என்பது புரியும், மேலும் ஏ.ஐ-யால் உருவாக்கப்பட்ட காதல் கதைகள் மற்றும் மர்ம கதைகள் வழியாக நீங்கள் உலாவிக்கொண்டிருப்பீர்கள்.
இப்படித்தான், உங்கள் மாலைப் பொழுது அப்படியே வீணாகிப் போயிருக்கும். விந்தையாக என்னவென்றால், டிஜிட்டல் யுகத்தில் வளர்ந்தவர்களும் கூட, "பிரைன் ராட்" (brain rot) எனப்படும் இந்த மூளைக்குத் தீங்கிழைக்கும் உள்ளடக்கம் ஏன் நமக்குக் கெட்டது என்பது பற்றிய வீடியோக்களைப் பார்க்கிறார்கள். ஆனாலும் கூட, அந்த மொபைலை கீழிறக்காமல் தொடர்ந்து ஸ்கோல் செய்து கொண்டே இருக்கிறார்கள்.
இப்போது, சமூக வலைதள பயனர்கள் ஆஃப்லைனில் நேரத்தை செலவிட மற்றொரு யோசனையை முன்வைத்துள்ளனர்: அதுதான் "பிரைன் ஸ்டாக்கிங்" (Brain Stacking). இதற்கு புத்தகங்கள், ஜர்னல்கள் (நாட்குறிப்புகள்) மற்றும் புதிர்கள் (puzzles) கைக்கொடுக்கின்றன. எதற்காக இந்த முயற்சி என்பதை யூகிக்க பெரிதாக யோசிக்க தேவையில்லை: குறைவான நேரம் சோஷியல் மீடியாவை ஸ்கோல் செய்வதுதான்
24
நாம் எதை அடுக்கி வைக்கிறோம்?
பிரைன் ஸ்டாக்" என்பதை ஆஃப்லைன் செயல்பாடுகளின் ஒரு தனிப்பட்ட பட்டியல் போல நினைத்துக் கொள்ளுங்கள்: ஒரு நாவல், சுடோகு புத்தகம், ஒரு ஜர்னல், குறுக்கெழுத்து புதிர்கள் (crosswords), 'வேர்ஸ் வாலி?' (Where’s Wally?) புத்தகம், ஏன் சில வரைபடப் பொருட்கள் கூட இதில் இருக்கலாம். அனைத்தையும் ஒன்றாக, மிக முக்கியமாக உங்கள் கைக்கு எட்டும் தூரத்தில் வையுங்கள். இன்ஸ்டாவில் ஒரு சிறு பார்வைதான் பார்த்துவிட்டு வரலாம்" என்ற எண்ணம் தோன்றும் போதெல்லாம், மொபைலுக்குப் பதிலாக இவற்றில் ஒன்றை எடுங்கள்.
சமூக வலைதளங்களில், கிரியேட்டர்கள் தங்களின் காலை, படுக்கையறை நேர வழக்கத்தின் ஒரு பகுதியாக, அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள இந்த ஸ்டாக்குகளை காட்டுகிறார்கள். சில நேரங்களில் ஒரே அமர்வில் பல செயல்பாடுகளிலும் அவர்கள் ஈடுபடுகிறார்கள். இந்த டிரெண்டை பிரபலப்படுத்தியவர்களில் 'மேண்டி ரூல்ஸ்' (Mandy Rulez) என்பவரும் ஒருவர். சிலரின் இந்த வாசிப்பு/புதிர் வழக்கம் சுமார் 45 நிமிடங்கள் வரை நீடிக்கிறது, என்றாலும் இதற்கு எந்தக் கட்டாய கால அட்டவணையும் கிடையாது.
34
இதனால் கிடைக்கும் பலன்கள் என்ன?
இந்தச் சிறிய புத்தகக் குவியல் உங்கள் மூளைக்குச் சீராக வேலை கொடுக்க உதவும். நரம்பியல் நிபுணர் டாக்டர் நேஹா கபூர் முன்பு 'இந்தியா டுடே' ஊடகத்திடம் கூறுகையில், சுடோகு நினைவாற்றல் மற்றும் பகுத்தறிவு திறன்களை மேம்படுத்துகிறது, கவனத்தை அதிகரிக்கிறது, மூளையைத் தூண்டுகிறது, முடிவெடுக்கும் திறனுக்கு உதவுகிறது, மேலும் மகிழ்ச்சியையும் சாதனை உணர்வையும் தருகிறது என்று கூறியுள்ளார்.
இது போன்ற செயல்கள் மூளையின் செயல்பாட்டை ஊக்குவிப்பதாக வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். அதனால்தான் இதற்கு 'பிரைன் ஸ்டாக்கிங்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏனெனில் நீங்கள் புத்தகங்கள், ஜர்னல்கள் மற்றும் புதிர்கள் போன்ற உங்கள் மூளைக்கு வேலை தரும் செயல்பாடுகளை ஒன்று சேர்த்து ஒரு குவியலாக (stack) வைக்கிறீர்கள்.
பேப்பர் புத்தகம்/பாரம்பரிய வாழ்க்கை முறைக்கு மாறுதல்
இந்த டிஜிட்டல் உலகத்தின் மிகப்பெரிய முரண்பாடு என்னவென்றால், அனைவரும் எந்நேரமும் ஆன்லைனிலேயே இருக்கிறார்கள், அதே நேரத்தில் அவர்கள் ஆஃப்லைனுக்கும் செல்ல விரும்புகிறார்கள். எல்லாவற்றிலிருந்தும் விலகி, டிஜிட்டல் உலகத்தைத் தவிர்த்து தனியாக இருப்பதுதான் இன்றைய காலகட்டத்தில் ஒரு புதிய ஆடம்பரமாக மாறியுள்ளது.
மக்கள் திரையில் பார்ப்பதைத் தவிர்க்க உதவும் பல பொருட்களைத் தங்களுக்குப் பிடித்த டோட் பைகளில் (totes) நிரப்பிச் சென்ற 'அனலாக் பேக்' (analogue bag) டிரெண்டை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இது அதன் மற்றொரு வடிவமாகும், இது குறிப்பாக மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. மேலும் உண்மையைச் சொல்லப்போனால், "அஜ்கல் மை பஹுத் பூல்னே லஹி ஹூ..." (இப்போது நான் எல்லாவற்றையும் மறந்துவிடுகிறேன்) என்று நீங்கள் மற்றவர்களிடம் புலம்புவதை எப்போது கேட்டிருக்கிறீர்கள்?
உங்கள் இந்த தொடர்ச்சியான டூம்ச்கிரோலிங் (Doomscrolling - தொடர்ந்து கெட்ட/வீண் செய்திகளைப் பார்த்துக் கொண்டே இருப்பது) பழக்கத்திற்கும் இதற்கும் நிச்சயமாகத் தொடர்பு இருக்கலாம். ஒரு 'பிரைன் ஸ்டாக்' உடனடியாக உங்கள் கவனக் சிதறல் பிரச்சினையைத் தீர்த்துவிடாது, சில நாட்களில் ஸ்கோலிங் பழக்கமே மீண்டும் ஜெயிக்கலாம். இருப்பினும், உங்கள் கடந்த கால இளமை காலத்தில் நீங்கள் கைவிட்டதாக நினைத்த ஒரு பழைய பொழுதுபோக்கை இது மீண்டும் மீட்டெடுக்க உதவும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.