மெட்ரோ சிட்டியில் 7.5 கோடி சொத்து... பிச்சை எடுத்தே கோடி கோடியாகக் குவித்து வரும் கில்லாடி!

First Published | Sep 10, 2024, 5:49 PM IST

மும்பையைச் சேர்ந்த பாரத் ஜெயின் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருக்கிறார். நன்கு படித்த, கார்ப்பரேட் கம்பெனியில் உயர்பதவி வகிக்கும் நிபுணர்களைவிட அதிகமாகச் சம்பாதிக்கிறார்.

Mumbai Begger Net Worth

பொதுவாக பிச்சைக்காரர்கள் என்றால் ​​​​மிகவும் வறுமையில் இருப்பார்கள், தினசரி பிழைப்புக்கே திண்டாடுவார்கள் என்று நினைப்போம். ஆனால் ஒரு பிச்சைக்காரர் கோடிக்கணக்கில் பணத்தைக் குவித்து ஆச்சரியம் அளித்து வருகிறார். பணக்கார பிச்சைக்காரராகக் கருதப்படும் பாரத் ஜெயின்தான் அந்த அபூர்வ மனிதர்.

Begger Bharat Jain

மும்பையைச் சேர்ந்த பாரத் ஜெயின் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருக்கிறார். நன்கு படித்த, கார்ப்பரேட் கம்பெனியில் உயர்பதவி வகிக்கும் நிபுணர்களைவிட அதிகமாகச் சம்பாதிக்கிறார்.

Tap to resize

World's richest begger Bharat Jain

குடும்ப நிதி நெருக்கடி காரணமாக பாரத் முறையான கல்வி கற்கவில்லை. இருந்தாலும், இந்த சவால்களை மீறி, தனது கடின உழைப்பால் பணம் சம்பாதித்தது, இரண்டு மகன்களையும் படிக்க வைத்துத் திருமணம் செய்து வைத்துள்ளார். பாரத் ஜெயின் வசம் உள்ள சொத்துகளின் மொத்த மதிப்பு சுமார் ₹7.5 கோடி என்று கூறப்படுகிறது.

Who is Bharat Jain

மாத வருமானம் ரூ.60,000 முதல் ரூ.75,000 வரை என்று பிரபல ஆங்கிலச் செய்தி நிறுவனம் ஒன்று கூறுகிறது. இது இந்தியாவில் உள்ள பல தொழில்நுட்ப வல்லுநர்களின் சராசரி சம்பளத்தைவிட மிக அதிகம்.

Bharat Jain assets

பிச்சை எடுத்து சம்பாதித்ததைத் தவிர, பல புத்திசாலித்தனமான முதலீடுகளையும் செய்துள்ளார் பாரத். மும்பையில் ரூ.1.4 கோடி மதிப்புள்ள 2 அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியிருக்கிறார். தானேயில் இரண்டு கடைகளில் முதலீடு செய்துள்ளார். இதன் மூலம் எதுவுமே செய்யாமலே மாத வாடகை என்ற வகையில் ரூ.30,000 வருமானம் கிடைக்கிறது.

Bharat Jain Net Worth

இவ்வளவு பணம் இருந்தாலும் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் மற்றும் ஆசாத் மைதானம் போன்ற இடங்களில் பாரத் தொடர்ந்து பிச்சை எடுத்து வருகிறார். பரேல் பகுதியில் வசிக்கிறார். இவரது குழந்தைகள் கான்வென்ட் பள்ளியில் படித்தனர். ஜெயினின் குடும்பமும் ஒரு ஸ்டேஷனரி கடையை நடத்தி வருகிறது.

Bharat Jain net worth

பாரத் ஜெயினின் கதை அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. கடின உழைப்புக்கு குறிப்பிடத்தக்க உதாரணமாக இருக்கிறார் பாரத் ஜெயின். சிறுவயதில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்ட பாரத் ஜெயின் இப்போது குடும்பத்துக்கு கோடி கோடியாக சொத்து சேர்த்து வைத்து, எதிர்காலத்தைப் பற்றிக் கவிலைப்படாமல் ஹாயாக இருக்கிறார்.

Latest Videos

click me!