Best Summer Drinks : கோடையில் டீ, காபி குடிக்கிறீங்களா? உடல் சூட்டை குறைக்கும் 5 சூப்பர் பானங்கள் இதோ

Published : May 10, 2026, 04:03 PM IST

கோடைக்காலத்தில் காஃபீன் பானங்கள் சோர்வை அதிகரிக்கும் என்பதால், அதற்கு மாற்றாக இயற்கை பானங்களைப் பருகலாம். இவை உடல் சூட்டைக் குறைத்து, சோர்வைப் போக்கி, நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகின்றன.

PREV
12
உடலை குளிர்விக்கும் 5 சூப்பர் பானங்கள்

கோடைக்கால வெயில் உச்சத்தை எட்டும் இந்த நாட்களில், வெளியில் மட்டுமல்ல ஏசி அறைக்குள்ளேயும் உடல் சோர்வு, தலைச்சுற்றல், எரிச்சல் போன்றவை பலரையும் பாதிக்கிறது. மதியம் ஒரு மணி அடித்தவுடன் சோர்வு வந்து, உடனே டீ அல்லது காப்பி குடிப்பது பலரின் பழக்கமாகி விட்டது. ஆனால், காஃபீன் அதிகமுள்ள இந்த பானங்கள் உடலில் நீர்ச்சத்தை குறைத்து, தற்காலிக சுறுசுறுப்புக்குப் பிறகு மேலும் சோர்வை ஏற்படுத்தும் என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை.

இதற்குப் பதிலாக, உடலை இயற்கையாகக் குளிர்விக்கும் பாரம்பரிய பானங்களைப் பயன்படுத்துவது சிறந்த வழியாகப் பார்க்கப்படுகிறது. இவை வெறும் தாகம் தீர்க்கும் பானங்கள் அல்ல; உடலின் எலக்ட்ரோலைட் சமநிலையை பேணியும், மனநிலையையும் சீராக்குகிறது. குறைந்த செலவில் அலுவலக மேசையிலேயே எளிதாக பயன்படுத்தக்கூடிய இந்த பானங்கள், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு இரட்டை நன்மை தருகின்றன.

22
டிஹைட்ரேஷன் தீர்வு

இளநீர் இந்த பட்டியலில் முதன்மையானது. இயற்கையான ORS எனக் கருதப்படும் இது, வெயிலால் இழக்கப்படும் உப்புச்சத்துக்களை விரைவாக ஈடுபடுத்துகிறது. தலைவலி, தசைப்பிடிப்பு போன்றவற்றை குறைக்க உதவுகிறது. அதோடு, சத்து மாவு கஞ்சி நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தி, உடலை உற்சாகமாக வைத்திருக்கிறது. புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த இந்த பானம், மதிய உணவிற்கு முன் எடுத்துக் கொண்டால் உணவு அளவையும் கட்டுப்படுத்த உதவும்.

வெட்டிவேர் சர்பத் போன்ற பானங்கள் உடல் உள் வெப்பத்தை கட்டுப்படுத்துவதுடன், மனஅழுத்தத்தையும் குறைக்கும். இதன் இயற்கை மணம் கூட மனநிலையை அமைதியாக்கும். இதனுடன், அதிக சர்க்கரை உள்ள பானங்களைத் தவிர்த்து, சாதாரண தண்ணீர் குடிக்கும் பழக்கம் அவசியம். கோடைகாலத்தில் காஃபீனை குறைத்து, இயற்கை பானங்களைத் தேர்வு செய்வது உடல் நலத்திற்கும், தினசரி செயல்திறனுக்கும் சிறந்த முதலீடாக அமையும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories