
வெறுங்காலுடன் நடந்தால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும் என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். இது நமக்கு மட்டுமின்றி குழந்தைகளுக்கு கூட பொருந்தும்.
ஆம், குழந்தைகள் வெறும்காலுடன் நடக்கும்போது தரை விரிப்புகள், புல் வெளிகள் மற்றும் தளங்கள் வித்தியாசத்தை அறிந்து கொள்வார்கள். மேலும் இதனால் அவர்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். எனவே இப்போது இந்த பதிவில் குழந்தைகளை வெறுங்காலுடன் நடக்க வைக்கும் போது அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: தினமும் 1 மணி நேரம் வாக்கிங் போனா இத்தனை நன்மைகளா?!
குழந்தையை வெறுங்காலில் நடக்க வைக்கும் போது கிடைக்கும் நன்மைகள்:
இரத்த அணுக்கள் அதிகரிக்கும்
உங்கள் குழந்தையை வெறுங்காலில் நடக்க வைக்கும் போது அவர்களது உடலில் இருக்கும் வெள்ளை அணுக்கள் குறைந்து சிவப்பு இரத்த
அணுக்கள் அதிகரிக்கும். இதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வலுவடையும். அதுவும் குறிப்பாக குறுநடை போடும் குழந்தை வெறும் காலில் நடந்தால் அந்த குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்.
தசை வளர்ச்சியடையும்
பொதுவாகவே குழந்தையின் கால் ரொம்பவே மென்மையாக இருக்கும். எனவே வெறுங்காலுடன் குழந்தையை நடக்க வைக்கும் போது குழந்தையின் கால் வலுவாகுவது மட்டுமின்றி, கால் தசை வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது.
மூளை சுறுசுறுப்பாக செயல்படும்
செருப்பு போட்டு குழந்தையை நடக்க வைப்பது பாதுகாப்பாக இருந்தாலும், அவர்களது மூளையானது சரியான தகவலை பெற முடியாமல் போய்விடும். அதுவே குழந்தையை வெறுங்காலில் நடக்க வைக்கும் போது குழந்தையின் கால் பூமியுடன் நேரடியாக தொடர்புகொள்ளும். இதனால் குழந்தையின் மூளையானது சுறுசுறுப்பாகவும், எப்போதுமே விழிப்புணர்வாகவும் இருக்கும். மேலும் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதை குழந்தையால் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.
இதையும் படிங்க: மாதவிடாய் நாட்கள்ல வாக்கிங் போனா நல்லதா? உடம்புக்கு என்னாகும் தெரியுமா?
உணர்ச்சி வளர்ச்சி மேம்படும்
பொதுவாக நம்முடைய உடலின் ஒட்டுமொத்த நரம்புகளும் பாதத்துடன் தான் இணைக்கப்பட்டுள்ளது. எனவே நாம் வெறுங்காலுடன் நடக்கும்போது உணர்ச்சியின் வளர்ச்சியானது மேம்படுத்தப்படும். இது குழந்தைகளுக்கும் பொருந்தும்.
நினைவில் கொள்:
உங்கள் குழந்தையை நீங்கள் வெறுங்காலுடன் தரையில் நடக்க வைக்கும் போது அவர்களது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மேம்படும் மற்றும் பல விஷயங்களையும் உங்கள் குழந்தையால் ஆராய்ந்து கற்றுக்கொள்ள முடியும். எனவே மேலே சொன்ன விஷயங்களை பெற இன்றிலிருந்து உங்கள் குழந்தையை வெறுங்காலில் நடக்க பழக்கப்படுத்துங்கள்.