சமய நூல்களில், நாம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய பல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த விதிகளைப் பின்பற்றினால், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் வளமும் கிடைக்கும். இந்த விதிகளை மீறினால், வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என பல்வேறு கருத்துக்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இரவில் நகங்களை வெட்டக்கூடாது, வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் தலைக்கு குளிக்கக்கூடாது மற்றும் முடி வெட்டக்கூடாது என்று சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதுபோலவே, உணவு உட்கொள்வதைப் பற்றியும் பல செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எந்தக் கடவுளை வழிபட்டாலும், வணங்காவிட்டாலும் முடியை அவிழ்த்துக்கொண்டு கோயிலுக்குச் செல்லக்கூடாது என்பது பெரியோரின் வாக்கு. உறங்கச் செல்லும் முன் முடியைக் கட்ட வேண்டும் என்கிற விதியும் சாஸ்திரத்தில் உண்டு. ஆனால் இதே கருத்து அறிவியல் ஆதாரங்களுடனும் விஞ்ஞானிகள் பலர் வலியுறுத்துகின்றனர். இந்நிலையில், இரவில் தூங்கும் முன் பெண்கள் ஏன் தலைமுடியை அவிழ்த்துக் கொண்டு தூங்கக்கூடாது என்பதை விரிவாக பார்க்கலாம்.