கடுகு எண்ணெய், இஞ்சி தொப்புளில் தடவுவதால் பல நன்மைகள் கிடைக்கும். இதனால் அசிடிட்டி, வாயு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் உடனே குறையும். வாயுத் தொல்லையால் வயிறு கனமாக, வலியாக, அசௌகரியமாக உணரலாம். ஆனால் தொப்புளில் இஞ்சி, கடுகு எண்ணெயை தடவினால் இந்தப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
மலச்சிக்கல், சாப்பிட்டது சரியாக ஜீரணமாகாதவர்கள், செரிமானம் பலவீனமாக உள்ளவர்கள் இதை தொப்புளில் தடவுவது நன்மை பயக்கும். கடுகு எண்ணெய் இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை வயிற்றில் உற்பத்தியாகும் அமிலத்தை கட்டுப்படுத்துகின்றன. புளிப்பு ஏப்பங்களை நிறுத்துகின்றன.