நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஆவார். இவர் நடிகர் மட்டுமின்றி பின்னணி பாடகர் மற்றும் தயாரிப்பாளர். இவர் 50 வயதை நெருங்கினாலும் இன்றளவும் தமிழ் சினிமாவில் இளமையான நடிகர் என வர்ணிக்கப்படுகிறார்.
26
இப்படி இவர் இளமையாகவும், ஃபிட்டாகவும் இருப்பதற்கு எப்படி தன்னை பராமரிக்கிறார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா..? அதற்கான பதில் இங்கே...
36
தளபதி விஜயின் டயட் பிளான் மிகவும் சிம்பிளானது. இவர் காலை 5:30 மணிக்கு எழுப்பி விடுவாராம். எழுந்ததும் குறைந்தது அரை மணி நேரம் ஒர்க் அவுட் செய்வாராம். சூட்டிங் காரணமாக வெளியூர் சென்றாலும் ஒர்க் அவுட் செய்வதில் தவறியதில்லை.
நடிகர் விஜய் 9:00 மணிக்கு காலை உணவையும், 1:00 மணிக்கு மதிய உணவையும், 7:00 மணிக்குள் இரவு உணவையும் எடுத்துக் கொள்வாராம். முக்கியமாக 9 மணிக்குள் தூங்கும் பழக்கம் உண்டாம்.
தளபதி சூட்டிங் சமயத்தில் அசைவ உணவுகளை சாப்பிட மாட்டாராம். வெளியூர் சென்றால் மட்டுமே ஹோட்டல் உணவுகளை சாப்பிடுவார். மற்ற நேரங்களில் வீட்டில் சமைத்த உணவுகளை மட்டும் தான் சாப்பிடுவாராம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
நடிகர் விஜய்க்கு ஜிம்முக்கு சென்று வொர்க் அவுட் செய்யும் பழக்கம் இல்லையாம். தினமும் தவறாமல் வாக்கிங் மட்டும் செய்வாராம். அது போல் அவருக்கு டீ காபி குடிக்கும் பழக்கம் கிடையாதாம். இதுதான் தளபதி விஜய் ஃபிட்னஸ் ஆக இருப்பதற்கு காரணம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.