Bad habits causing hair loss in tamil
தற்போது முடி உதிர்வு என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகவே மாறிவிட்டது. முடி உதிர்வால் பலரும் கவலையில் உள்ளனர். சிலருக்கு முடி உதிர்தலுக்கு மரபணு மற்றும் சில மருந்துகள் கூட காரணமாகும். ஆனால், பலருக்கு அவர்கள் அன்றாட பழக்க வழக்கங்களால் தான் முடி உதிர்கிறது. நாம் நம்முடைய வாழ்க்கையில் தினமும் செய்யும் சில பழக்கவழக்கங்கள் நம்முடைய தலைமுடியை பலவீனமாக்குகின்றது. மேலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவை உடைந்து விடுகிறது. எனவே முடி உதிர்வை ஏற்படுத்தும் நம்மிடம் இருக்கும் அந்த கெட்ட பழக்கங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Bad habits causing hair loss in tamil
அடிக்கடி சூடான நீரில் குளிப்பது:
பொதுவாக குளிர்காலத்தில் நாம் வெந்நீரில் தான் குளிப்போம். ஆனால் அடிக்கடி வெந்நீரில் தலைக்கு குளித்தால் உச்சம் தலையில் இருக்கும் இயற்கையான எண்ணெய்கள் அகன்றுவிடும். அதன் காரணமாக முடி வறண்டு விடும் மற்றும் பலவீனமடையத் தொடங்கும். எனது வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே வெந்நீரில் குளிக்கலாம். ஆனால் அதிக சூடான நீரில் அல்ல.
இறுக்கமாக தலை முடியை பின்னுதல்:
இறுக்கமாக தலை முடியை பின்னுதல், போனிடெயில் அல்லது கொண்டை போடுதல் ஆகியவை முடியின் வேர்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக முடி உதிர ஆரம்பிக்கும். எனவே நீங்கள் எப்போதும் தலைமுடியை வாரிநாளும் இறுக்கமாக கட்டுவதை தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: இளம் வயதில் முடிகொட்டும் பிரச்சனை; இதுக்கு என்ன காரணம் தெரியுமா?
Bad habits causing hair loss in tamil
அடிக்கடி ஸ்டைலிங் செய்வது:
ஷாப்பிங் சென்றாலோ, அலுவலகத்திற்கு சென்றாலோ தலைமுடியை நாம் ஸ்டைலிங் செய்யாமல் வெளியே செல்ல மாட்டோம். இதற்கு ஹேர் டிரையர், கர்லிங் அயர்ன்கள், ப்ளோர் ட்ரையர் போன்றவற்றை அதிகமாக தலைமுடிக்கு பயன்படுத்தினால் முடியில் இருக்கும் இயற்கையான ஈரப்பதமானது அன்று விடும். இதன் காரணமாக சீக்கிரமே முடி வலுவிழந்து உடைய ஆரம்பிக்கும். எனவே நீங்கள் தலைமுடிக்கு இது போன்ற கருவிகளை பயன்படுத்தும் போது அதற்குரிய ஸ்பிரேயை பயன்படுத்துங்கள். மேலும் அவற்றை குறைவாகவும் பயன்படுத்துங்கள்.
தவறான சீப்பை பயன்படுத்துதல்:
முடியை சீப்புவதற்கு கடுமையான அல்லது தவறான சீப்பை பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அவை முடி உதிர்வதற்கு வழிவகுக்கும். அதுபோல ஈரமான தலையை ஒருபோதும் சீப்ப வேண்டாம் மற்றும் தலைமுடியை சீப்பும்போது அழுத்தமாக அல்லாமல், மென்மையாக சீப்பவும்.
Bad habits causing hair loss in tamil
ஆரோக்கியம் மற்ற உணவை சாப்பிடுவது:
உங்களது உணவில் புரதம், இரும்பு, துத்தநாகம் மற்றும் பல வைட்டமின்கள் குறைவாக இருந்தால் முடி உதிர்வு பிரச்சனை அதிகரிக்கும். எனவே எப்போதும் ஆரோக்கியமான உணவை மட்டுமே சாப்பிடுங்கள். இதனால் முடி ஆரோக்கியமாக இருக்கும்.
அடிக்கடி கலரிங் செய்தல்:
நீங்கள் உங்கள் தலை முடிக்கு கலரிங், ஸ்ட்ரெய்ட்டனிங் போன்றவற்றை அடிக்கடி செய்தால் முடி வழுவிழந்து உடைய ஆரம்பிக்கும். மேலும் நீங்கள் இரசாயன சிகிச்சை செய்ய விரும்பினால், லேசான மற்றும் குறைவான தீங்கு விளைவிக்கும் பொருட்களை மட்டுமே தலைமுடிக்கு பயன்படுத்துங்கள்.
இதையும் படிங்க: முடி நீளமா வளர.. சின்ன வெங்காயத்தோட இந்த '1' எண்ணெய் சேர்த்து தேய்ச்சு பாருங்க!!
Bad habits causing hair loss in tamil
அதிக மன அழுத்தம் மற்றும் பதட்டம்:
உங்களுக்கு அதிகமான அழுத்தம் மற்றும் பதட்டம் இருந்தால் முடி முன்கூட்டியே உதிர ஆரம்பிக்கும். எனவே மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க யோகா, தியானம் சிறிய உடற்பயிற்சியை உங்களது அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
தலைமுடியை சரியாக பராமரிக்காமல் இருப்பது:
உங்களது உச்சந்தலை சுத்தமாக இல்லையென்றால் தலைமுடி உதிர ஆரம்பிக்கும். ஏனெனில் தலையில் இருக்கும் அழுக்கு, எண்ணெய் மற்றும் தூசிகள் முடி உதிர்வதற்கு வழிவகுக்கும். எனவே தலை முடியை சுத்தமாக வையுங்கள். அதுபோல எண்ணெய் கொண்டு தலைமுடிக்கு நன்றாக மசாஜ் செய்யுங்கள்.