
முகம் எப்போதும் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெண்களும் விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் சமூக ஊடகங்களில் இருக்கும் பல வீடியோக்களை பார்த்து, முயற்சித்தும் வருகின்றன. அதிக செலவில் இல்லாமல் சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுவதாக அதில் சொல்லுகின்றன. இதனால் பெரும்பாலான பெண்கள் அதன் பின்விளைவுகள் என்ன என்பதை பற்றி சற்றும் யோசிக்காமல் உடனே அந்த வீடியோவில் சொல்லப்பட்டதை அப்படியே தங்களுடைய முகத்திற்கு பயன்படுத்துகிறார்கள். ஆனால் சில சமயங்களில் அவை உங்களது முகத்திற்கு சேதத்தை தான் ஏற்படுத்தும். எனவே, எதையும் யோசிக்காமல் முகத்தில் எதையும் தடவாமல் இருப்பது தான் ரொம்பவே நல்லது. இப்போது உங்கள் முகத்தில் சில பொருட்களை தடவுவது முக அழகை கெடுக்கும். அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
எலுமிச்சை:
பலரும் முகத்திற்கு எலுமிச்சையை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதை நேரடியாக முகத்தில் தடவக்கூடாது என்று பலருக்கும் தெரிவதில்லை. நம்முடைய முகம் ரொம்பவே உணர்திறன் வாய்ந்தது என்பதால், எலுமிச்சையை முகத்திற்கு நேரடியாக பயன்படுத்தினால், முகம் எரிச்சலடையும்.
பேக்கிங் சோடா:
பேக்கிங் சோடாவை முகத்தில் பயன்படுத்தினால் பருக்கள் வருவது மட்டுமின்றி, சருமம் மோசமாக பாதிக்கப்படும்.
பூண்டு:
பூண்டில் பலவிதக்கூறுகள் உள்ளதால் அதை முகத்தில் நேரடியாக பயன்படுத்தினால், முகத்தில் எரிச்சல் மற்றும் தடுப்புகள் ஏற்படும்.
இதையும் படிங்க: வாழைப்பழத்தை 'இப்படி' யூஸ் பண்ணுங்க; முகம் தங்கம் போல ஜொலிக்கும்!
கடுகு எண்ணெய்:
கடுகு எண்ணெய் மற்ற எண்ணெயினை போல அல்ல. இதை நீங்கள் முகத்தில் நேரடியாக பயன்படுத்தினால், முகம் கருப்பாக மாறிவிடும்.
உப்பு:
பலர் முகத்தை ஸ்கிரப் செய்ய உப்பு பயன்படுத்துகிறார்கள். ஆனால் அது தவறு. உப்பைக் கொண்டு முகத்தில் ஸ்கிரப் செய்யும் போது வீக்கம், எரிச்சல் ஏற்படும்.
இதையும் படிங்க: தேங்காய் எண்ணெயில் '1' ஸ்பூன் தேன் கலந்து யூஸ் பண்ணுங்க.. முக சுருக்கம் மறையும்!
சர்க்கரை:
பெரும்பாலானவர் சர்க்கரையை முகத்திற்கு ஸ்க்ரப்பாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதை முகத்திற்கு பயன்படுத்துவது நல்லதல்ல. ஏனெனில் அவற்றில் கூர்மையான விளிம்புகள் உணர்திறன் வாய்ந்த உங்களது முகத்தை சேதப்படுத்தும். அதுமட்டுமின்றி முகத்தில் வீக்கம், எரிச்சல், சிவத்தல், வறட்சி போன்ற பிற சருமப் பிரச்சனைகயும் ஏற்படுத்தும். முக்கியமாக முகப்பரு பிரச்சனை உள்ளவர்கள் ஒருபோதும் சர்க்கரை உப்பு போன்றவற்றை முகத்தில் பயன்படுத்தக் கூடாது.
இலவங்கப்பட்டை:
இலவங்கப்பட்டை சமையல் அறையில் பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருள். இதை முகத்தில் நேரடியாக பயன்படுத்தினால் எரிச்சலை ஏற்படுத்தும். அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கூட இதை அரிதாகவே பயன்படுத்துகிறார்கள்.