Daily Banana: விலை குறைவு, சத்துக்கள் அதிகம்... ஆனால் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது பலருக்கும் தெரியாது. அந்த 5 முக்கிய நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
வாழைப்பழம் ரொம்ப ஈஸியா, குறைஞ்ச விலையில கிடைக்கிற ஒரு பழம். இதுல பொட்டாசியம், ஃபைபர், வைட்டமின் B6, வைட்டமின் C, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்னு ஏகப்பட்ட சத்துக்கள் இருக்கு. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டா, உடம்புல நிறைய பாசிட்டிவ் மாற்றங்கள் நடக்கும்னு நிபுணர்கள் சொல்றாங்க. அது என்னென்னனு பார்ப்போம்.
26
உடலுக்கு உடனடி சக்தி
வாழைப்பழம் சாப்பிட்டா உடலுக்கு இன்ஸ்டன்ட் எனர்ஜி கிடைக்கும். இதுல குளுக்கோஸ், ஃப்ரக்டோஸ், சுக்ரோஸ் போன்ற இயற்கையான சர்க்கரைகள் இருக்கு. இதனாலதான் ஸ்போர்ட்ஸ் ப்ளேயர்ஸ், ஜிம்முக்கு போறவங்க வாழைப்பழம் சாப்பிடுறாங்க. காலையில டிபன் கூட ஒரு வாழைப்பழம் சாப்பிட்டா நாள் முழுக்க சுறுசுறுப்பா இருக்கலாம்.
36
இதய ஆரோக்கியம்
வாழைப்பழத்தில் இருக்கிற பொட்டாசியம், ரத்த அழுத்தத்தை அதாவது பி.பி-யை கண்ட்ரோல் பண்ணுது. நம்ம உடம்புல சோடியம் அதிகமானா பி.பி. ஏறும். பொட்டாசியம் அந்த பாதிப்பைக் குறைச்சு, ரத்த நாளங்கள் சரியா வேலை செய்ய உதவுது. இதனால இதயமும் ஆரோக்கியமா இருக்கும்.
வாழைப்பழத்தில் உள்ள டயட்டரி ஃபைபர், செரிமானத்தை சூப்பராக்குது. மலச்சிக்கல் பிரச்சனை இருக்கிறவங்களுக்கு இது நல்ல தீர்வு. இந்த நார்ச்சத்து, குடல் இயக்கத்தை சீராக்கி, கழிவுகளை வெளியேற்ற உதவுது. வயிறு நிறைஞ்ச மாதிரி ஒரு ஃபீல் கொடுக்குறதால, தேவையில்லாம சாப்பிடுறதும் குறையும்.
56
மன ஆரோக்கியம்
வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் B6, செரோடோனின், டோபமைன் போன்ற நியூரோ டிரான்ஸ்மிட்டர்களை உற்பத்தி செய்ய உதவுது. இது நம்ம மனநிலையை சந்தோஷமா வெச்சுக்கிற ரசாயனங்கள். அதனால, வாழைப்பழம் சாப்பிட்டா மனசு ரிலாக்ஸா இருக்கும், கவனமும் சிதறாதுன்னு ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்றாங்க.
66
தசை ஆரோக்கியம்
நிறைய பேருக்கு ராத்திரியில கால் பிடிச்சு இழுக்குற மாதிரி வலி இருக்கும். இதுக்கு தாது உப்புகள் குறைபாடு ஒரு காரணமா இருக்கலாம். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் தசை செயல்பாட்டை மேம்படுத்தும். உடற்பயிற்சி செய்றவங்களுக்கு இது ரொம்ப நல்லது. ஆனா, சர்க்கரை நோய் இருக்கிறவங்க டாக்டர்கிட்ட கேட்டுட்டு சாப்பிடறது நல்லது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.