Top 5 Stylish Sofa Designs: உங்கள் லிவிங் ரூமை பிரம்மாண்டமாக காட்டுவது எப்படி? எந்த மாதிரியான சோஃபா செட்களைப் பயன்படுத்தலாம்? எந்த ஸ்டைல் சோஃபா செட் உங்கள் லிவிங் ரூமை விலை உயர்ந்ததாகவும், ஆடம்பரமாகவும் காட்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.
வீட்டின் வரவேற்பறை அழகாக காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கில் செலவழித்து விலை உயர்ந்த சோஃபா செட்களை வாங்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் லிவிங் ரூமை ராயல் லுக்காக காட்டும் 5 ஸ்டைலான சோஃபா டிசைன்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
26
வெல்வெட் சோஃபாக்கள் (Velvet Sofa)
வீட்டைப் பார்த்தவுடனே பிரம்மாண்டமாகத் தெரிய வைக்க வெல்வெட் சோஃபாக்கள் உதவும். வெல்வெட் துணியின் மென்மையும், அதன் பளபளப்பும் அறையின் அழகை முற்றிலும் மாற்றிவிடும். ராயல் ப்ளூ, எமரால்டு கிரீன், மெரூன் போன்ற டார்க் நிறங்களில் வெல்வெட் சோஃபாக்களை அமைத்து அதற்கு பொருத்தமான கவர் போடும் போது சூப்பராக தெரியும்.
36
எல்-ஷேப் சோஃபா (L-Shape Sofa)
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு எல்-ஷேப் சோஃபா வரப்பிரசாதம். இந்த வகை சோஃபாக்களை வரவேற்பறையின் மூலையில் சுவரோடு ஒட்டி கச்சிதமாக வைக்க முடியும். குறைவான இடத்தை ஆக்கிரமித்தாலும், இது உங்கள் லிவிங் ரூமுக்கு ரிச் லுக்கைக் கொடுக்கும்.
பாரம்பரிய அழகையும், நீடித்த உழைப்பையும் விரும்புபவர்களின் முதல் தேர்வு மர சோஃபாக்கள் தான். தேக்கு அல்லது நல்ல தரமான மரங்களால் செய்யப்படும் சோஃபாக்கள் லிவிங் ரூமுக்கு ஒரு கம்பீரமான, கிளாசிக் அழகைத் தரும். இதன் மீது தடிமனான, வண்ணமயமான மெத்தைகளை (Cushions) அடுக்கி, உங்கள் வீட்டின் இன்டீரியருக்கு ஏற்ப இதை இன்னும் ஸ்டைலாக மாற்றிக் கொள்ளலாம்.
56
வளைவான சோஃபாக்கள் (Curved Sofa)
சதுர அல்லது செவ்வக வடிவ சோஃபாக்களைத் தாண்டி, இப்போது இன்டீரியர் உலகில் உலகளவில் ட்ரெண்டாகி வருவது இந்த வளைவான சோஃபாக்கள் தான். இதன் வளைந்த மென்மையான வடிவமைப்பு பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாகவும், கலைநயமிக்கதாகவும் இருக்கும். வீட்டிற்குள் நுழைந்தவுடனே விருந்தினர்களின் கண்களைச் சுண்டி இழுக்கும்.
66
சோஃபா கம் பெட் (Sofa Cum Bed)
சிறிய வீடுகளில் சோஃபா கம் பெட் தேர்வு செய்யலாம். பகல் நேரத்தில் பார்ப்பதற்கு மிக நேர்த்தியான, கிளாஸான சோஃபாவாக இருக்கும். இரவு நேரத்தில் அல்லது வீட்டிற்கு உறவினர்கள் வரும்போது இதை அப்படியே படுக்கையாக மாற்றிக் கொள்ளலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.