
ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்காக பல விஷயங்களை செய்கிறார்கள். எனவே, உங்கள் குழந்தையின் நல்ல வாழ்க்கைக்காக 5 வாழ்க்கை திறன்களை நீங்கள் அவர்களுக்கு சிறுவயதிலிருந்தே கற்றுக் கொடுக்க வேண்டும். அதுவும் குறிப்பாக, அவர்களின் 10 வயதிற்குள் கண்டிப்பாக சொல்லிக் கொடுக்க வேண்டும். அவை அவர்களை சிறந்த குடிமகனாகவும், வெற்றி பெறும் நபராகவும் உருவாக்கும். அவை எண்ணின் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சுயவிவரம் என்பது தங்களது உணர்வுகள் அதாவது பலம், பலவீனம் மற்றும் தங்களைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதாகும். குழந்தைகள் தங்களைப் பற்றி புரிந்து கொள்வதன் மூலம் அவர்கள் தங்களை நன்றாக வளர்த்துக்கொள்ள முடியும். மேலும் இதன் மூலம் குழந்தைகள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்காமல், தங்களது மதிப்பை உணர்ந்து தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்வார்கள்.
இது திறன் மூலம் குழந்தைகள் மற்றவர்களுடன் திரும்பிட தொடர்பு முடியும். இந்த திறன் ஆனது பேச்சு எழுத்து மற்றும் உடல் மொழி ஆகியவற்றை கொண்டுள்ளது. நல்ல தகவல் தொடர்பு மூலம் குழந்தைகள் தங்களது கருத்துக்களை பிறரிடம் தெளிவாகவும், மரியாதையாகவும் வெளிப்படுத்துவதற்கு உதவும். அதுமட்டுமின்றி அவர்கள் பிறரது கருத்துக்கொல்லையும் புரிந்து, அவர்களையும் மதிக்கப் பழகுவார்கள்.
சிறுவயதிலிருந்தே குழந்தைகள் இந்த திறனை கற்றுக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் அவர்கள் எப்பேர்பட்ட சவால்களையும் சுலபமாக எதிர்கொள்ளும் திறன் அவர்களுக்குள் இருக்கும். முக்கியமாக இந்த திறன் மூலம் அவர்கள் பகுத்தறிவுடன் சிந்திக்க கற்றுக் கொள்வார்கள் மற்றும் சரியான முடிவுகளையும் எடுப்பார்கள். இந்த சிக்கல் தீர்க்கும் திறனால் உங்களது குழந்தை பிரச்சினைகளை எதிர்கொள்ள ஒருபோதும் தயங்கவே மாட்டார்கள். அதற்கு மாறாக அந்தப் பிரச்சனையை தீவிரமாக ஆராய்ந்து, அதற்குரிய சாத்தியமான தீர்வுகளை கண்டுபிடித்து வெற்றியை காண்பார்கள்.
இதையும் படிங்க: பெற்றோரிடமிருந்து பிள்ளைகள் கேட்க விரும்பும் 3 வார்த்தைகள் இவை தான்!
மற்றவர்களுடன் இணைந்து செயல்படுவது தான் இந்த திறனின் சிறப்பு. இந்த திறனானது குழந்தைகளின் பொதுவான லக்குகளை அடைய பெரிதும் உதவுகிறது. சிறுவயதிலிருந்தே குழந்தைகள் இந்த திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம் அவர்கள் பிறரின் கருத்துக்களை மதிக்கவும், அவர்களுக்கு உதவவும் எப்போதுமே தயாராகவே இருப்பார்கள். முக்கியமாக அவர்கள் வெற்றிக்காக அதிகமாக பாடுபடுவார்கள்.
இதையும் படிங்க: பெற்றோருக்கு தெரியாமலே பிள்ளைகள் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்! என்னென்ன தெரியுமா?
படைப்பாற்றல் திறன் என்பது புதிய யோசனைகளை உருவாக்கவும், புதிய வழிகளில் சிந்திக்கவும் உதவுகிறது. குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்து இந்த திறன்களை கற்றுக் கொடுப்பதன் மூலம் அவர்கள் சுயமாக சிந்திக்கவும் புதுமையான விஷயங்களை கண்டுபிடிக்கவும் உதவுகிறது. சொல்லப் போனால் இந்த திறன் அவர்களுக்கு சவால்களை எதிர்கொள்ளவும், புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள ஆர்வத்தை தூண்டவும் உதவும்.