இன்றைய டிஜிட்டல் உலகில் 30 நிமிடத்தில் ஆடைகள் வீட்டிற்கு வந்தாலும், நாமே நேரடியாகக் கடைக்குச் சென்று, துணிகளைத் தொட்டுப் பார்த்து, குடும்பத்துடன் வாங்கும் மகிழ்ச்சிக்கும் திருப்திக்கும் இந்த ஆன்லைன் டெலிவரி ஈடாகாது. அதற்கான காரணங்கள் இதோ:
ஆன்லைனில் பார்க்கும்போது ஆடைகள் மிகவும் அழகாகத் தெரியும், ஆனால் நேரில் வரும்போது அதன் தரம் மாறலாம். நாமே நேரடியாகக் கடைக்குச் செல்லும்போது, துணியின் தரம், மென்மை மற்றும் அது நமக்கு சவுகரியமாக இருக்குமா என்பதைத் தொட்டுப் பார்த்துத் தெளிவாகத் தேர்ந்தெடுக்கலாம்.
26
உடனுக்குடன் அளவுகளை மாற்றுதல் :
நாம் வாங்கும் ஆடை நமக்குக் கச்சிதமாகப் பொருந்த வேண்டும். பெரிய கடைகளில் துணிகளை எடுக்கும்போது, அங்கேயே தையல்காரர்கள் இருப்பார்கள். ஆடையின் நீளத்தையோ அல்லது அளவையோ உடனே மாற்றி, நமக்குத் தகுந்தபடி கச்சிதமாகத் தைத்துக் கொடுத்துவிடுவார்கள். ஆன்லைனில் வாங்கினால் இந்த வசதி கிடைக்காது.
36
வீண் செலவுகள் குறையும்:
ஆன்லைன் ஆப்ஸ்களில் வரும் தள்ளுபடி விளம்பரங்களைப் பார்த்து, நமக்குத் தேவை இல்லாத ஆடைகளைக் கூட அவசரப்பட்டு வாங்கி விடுகிறோம். ஆனால், நேரடியாகக் கடைக்குச் செல்லும்போது நமக்கு என்ன தேவையோ, அதை மட்டுமே திட்டமிட்டு வாங்குவோம். இதனால் வீண் பண விரயம் தவிர்க்கப்படும்.
ஆன்லைனில் ஆர்டர் செய்யும் ஆடைகள் சில நேரங்களில் தவறான அளவிலோ, வேறு நிறத்திலோ அல்லது தரம் குறைந்தோ வர வாய்ப்புள்ளது. அதை ரீட்டன் (Return) செய்ய முடியும் என்றாலும், அது நேர விரயம் தான். ஆனால் கடையில், ஆடைகளை நாமே அணிந்து பார்த்து (Trial Run) வாங்குவதால் 100% திருப்தி கிடைக்கிறது.
56
பழகிய கடைக்காரர்களின் வழிகாட்டுதல்:
நமக்குத் தெரிந்த கடைகளுக்குத் தொடர்ந்து செல்லும்போது அங்கிருக்கும் ஊழியர்களுடன் நல்ல நட்பு ஏற்படும். அவர்கள் நமது ரசனையைத் தெரிந்துகொண்டு, நமக்குச் சூட்டாகும் நல்ல ஆடைகளைப் பரிந்துரைப்பார்கள். இந்த மனிதப் பிணைப்பும் உண்மையான வழிகாட்டுதலும் ஆன்லைன் செயலிகளில் கிடைக்காது.
66
மறக்க முடியாத நினைவுகள்:
நமக்கு பிடித்த ஆடைகளின் பின்னால் எப்போதும் ஒரு அழகான கதை இருக்கும். சிறு வயதில் பெற்றோருடன் கடை கடையாக அலைந்து ஆடை எடுத்தது, தீபாவளி ஷாப்பிங் முடித்துவிட்டு ஹோட்டலில் சாப்பிட்டது என நேரடியாகச் சென்று துணி எடுக்கும்போது கிடைக்கும் நினைவுகள் என்றும் பசுமையானவை.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.