நாம் கர்ப்பமாக இருப்பதை கண்டறிவதற்கு, இன்றைய நவீன காலத்தில் மருந்து கடைகளில் கிடைக்கும் டெஸ்ட் கிட்டை வாங்கி பரிசோதனை செய்யலாம். அதில் இரண்டு கோடுகள் வந்தால் நீங்கள் கர்பம் என்றும், ஒரு கோடு மட்டும் வந்தால் நீங்கள் கர்பம் இல்லை என்றும் அர்த்தம். ஆனால், முந்தைய காலங்களிலெல்லாம் கர்ப்பத்தைக் கண்டறிய கையில் நாடி பிடித்து பார்ப்பார்கள். இதுபோல கர்ப்பத்தை கண்டறிய பல வழிமுறைகள் உள்ளன.
ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறிகள் வெவ்வேறுவிதமாக இருக்கும். சிலருக்கு அறிகுறிகள் இல்லாமல் கூட இருக்கும். அதற்கு அவர்களின் உடல் நிலை முக்கிய காரணமாக அமைத்துள்ளது. இருப்பினும், மாதவிடாய் தள்ளிப்போன பிறகு ஒவ்வொரு பெண்ணிற்கும் ஏற்படும் ஆரம்ப கால பொதுவான அறிகுறிகள் சில உள்ளன. அவற்றை தெரிந்து வைத்து கொள்வோம்.