லாக்டவுனில் கோலி மனைவியின் பவுலிங்கில் மட்டுமே ஆடியிருக்கார்..! கவாஸ்கரின் கமெண்ட்டுக்கு அனுஷ்கா சர்மா பதிலடி

First Published Sep 25, 2020, 3:57 PM IST

ஆர்சிபி கேப்டன் விராட் கோலி குறித்த கவாஸ்கரின் விரும்பத்தகாத கமெண்ட்டுக்கு, கோலியின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. வழக்கம்போலவே இந்த சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ள ஆர்சிபியிடம் அதற்கான கூறு தெரியவில்லை. சன்ரைசர்ஸிடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிடம் 97 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
undefined
பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் விராட் கோலி, வழக்கத்திற்கு மாறாக ஃபீல்டிங் மற்றும் பேட்டிங் ஆகிய இரண்டிலுமே படுமோசமாக சொதப்பினார். ஃபீல்டிங்கில் கேஎல் ராகுலின் 2 எளிய கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டார் கோலி. அந்த கேட்ச்களை தவறவிட்டதற்கு பின்னர் 9 பந்தில் 42 ரன்களை குவித்தார் ராகுல். எனவே அந்த கேட்ச் வாய்ப்பு ஆட்டத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல பேட்டிங்கிலும் வெறும் ஒரு ரன்னில் வெளியேறினார்.
undefined
வழக்கமாக பேட்டிங், ஃபீல்டிங், ஃபிட்னெஸ் என அனைத்திலும், ஒரு கேப்டனாக தனது அணி வீரர்களுக்கு முன்னோடியாக இருந்து முன்னின்று வழிநடத்தும் கோலி, நேற்று அதை செய்ய தவறினார். அதை அவரே ஒப்புக்கொள்ளவும் செய்தார். போட்டிக்கு பின்னர் பேசும்போது, தோல்விக்கு இரு கைகளை உயர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார் கோலி.
undefined
இதற்கிடையே, கோலி ஒரு ரன்னில் அவுட்டானது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், லாக்டவுனில் கோலி, அவரது மனைவியின் பவுலிங்கில் மட்டுமே பேட்டிங் ஆடி பயிற்சி செய்திருக்கிறார் என்று ஒரு கமெண்ட் செய்தார்.
undefined
லாக்டவுனில் கோலி, தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் வீட்டில் கிரிக்கெட் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. எனவே அதை மனதில் வைத்து கிண்டலடிக்கும் விதமாக கவாஸ்கர் பேசினார்.
undefined
ஆனால் கவாஸ்கரின் பேச்சை ரசிக்காத கோலியின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா கவாஸ்கருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
undefined
கவாஸ்கருக்கு பதிலடி கொடுத்துள்ள அனுஷ்கா சர்மா, மிஸ்டர் கவாஸ்கர், உங்கள் மெசேஜ் ரசிக்கும்படியாக இல்லை. ஆனால் உங்களுக்கு பதிலளிக்க விரும்புகிறேன். விளையாட்டு வீரராக இருக்கும் கணவரின் ஆட்டத்தில் இருக்கும் ஏற்ற இறக்கங்களுக்கு மனைவியை எப்படி குற்றம்சொல்லமுடியும்? கிரிக்கெட் வீரர்களை மதிப்பவர் நீங்கள்.. அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை ஆட்டத்தில் இழுக்க மாட்டீர்கள்.
undefined
அதே மரியாதையை எங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று உங்களுக்கு ஏன் தோன்றவில்லை? என் கணவர் சரியாக ஆடாததை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால் என்னை ஏன் அதில் இழுக்கிறீர்கள்? 2020ல் நாம் இருக்கிறோம். ஆனால் என்னை கிரிக்கெட்டுக்குள் இழுத்துவிடுவதை மட்டும் இன்னும் நிறுத்தவில்லை. மரியாதைக்குரிய மிஸ்டர் கவாஸ்கர், நீங்கள் ஒரு லெஜண்ட். கிரிக்கெட்டில் உயர்ந்த இடத்தில் உள்ள மதிப்பிற்குரியவர் நீங்கள். நீங்கள் எங்களை பற்றி பேசியதை கேள்விப்பட்டதும் இதை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதுதான் சொன்னேன் என்று அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.
undefined
click me!