2025 இல் நிழல் இல்லாத நாள் எப்போது? அரிய வானியல் நிகழ்வைக் காண்பது எப்படி?

Published : Apr 22, 2025, 09:54 AM IST

பெங்களூருவில் ஏப்ரல் 24ஆம் தேதி மதியம் சரியாக 12.17 மணிக்கு பூஜ்ய நிழல் நிகழ்வைக் காண முடியும். கடக ரேகைக்குக் கீழே அமைந்துள்ள இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பூஜ்ஜிய நிழல் நிகழ்வைக் காணலாம். பெங்களூருவில், பொதுவாக ஏப்ரல் 24-25 தேதிகளில் நிழல் இல்லாத நாள் வரும்.

PREV
14
2025 இல் நிழல் இல்லாத நாள் எப்போது? அரிய வானியல் நிகழ்வைக் காண்பது எப்படி?
Zero shadow day 2025

அரிய வானியல் நிகழ்வு:

நிழல் இல்லாத நாள் என்பது ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே வரும் அரிய வானியல் நிகழ்வாகும். இது நிழல் இல்லாத நாள் அல்லது பூஜ்ய நிழல் நாள் என்று அழைக்கப்படுகிறது.

பெங்களூருவில் ஏப்ரல் 24ஆம் தேதி மதியம் சரியாக 12.17 மணிக்கு பூஜ்ய நிழல் நிகழ்வைக் காண முடியும் என இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் (IIA) விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.அதன்படி வரும் வியாழக்கிழமை மதியம் சூரியன் உச்சிக்கு வரும்போது 'பூஜ்ஜிய நிழல்' நிகழ்வைக் காணலாம்.

24
Zero shadow day 2025

நிழல் இல்லாத நாள் என்றால் என்ன?

ஓர் ஆண்டில் குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் ​சூரியன் உச்சிக்கு வரும்போது பொருட்களின் நிழல் நேரடியாக அவற்றின் கீழேயே விழும். நிழல் இல்லாத இந்த நிகழ்வை ஆண்டில் இரண்டு நாட்கள் மட்டும் காணலாம். நிழல் இல்லாத நாள் என்பதால் நாள் முழுவதும் நிழலே இல்லாமல் போகாது. குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் நிழல் இல்லாமல் இருக்கும். 

34
Zero shadow day 2025

பூஜ்ய நிழல் நிகழ்வை எங்கே காணலாம்?

பெங்களூரு, சென்னை, மங்களூரு உட்பட, கடக ரேகைக்குக் கீழே அமைந்துள்ள இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பூஜ்ஜிய நிழல் நிகழ்வைக் காணலாம் என இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் பொது மக்கள் தொடர்பு மற்றும் கல்வி (SCOPE) பிரிவின் தலைவர் நிருஜ் மோகன் ராமானுஜம் கூறியுள்ளார்.

44
Zero shadow day 2025

பெங்களூருவில் நிழல் இல்லாத நாள்:

பெங்களூருவில், பொதுவாக ஏப்ரல் 24-25 தேதிகளில் நிழல் இல்லாத நாள் வரும். மீண்டும் ஆகஸ்ட் 18ஆம் தேதியும் நிழல் இல்லாத நாள் ஏற்படும் என்றும் ராமானுஜம் கூறுகிறார்.

Read more Photos on
click me!

Recommended Stories