Diamonds: மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்ட சுரங்கத்தில் பணிபுரியும் ரச்னா கோல்டார் என்ற பெண், 2.53 காரட் எடையுள்ள எட்டு வைரக் கற்களைக் கண்டெடுத்துள்ளார். வைரம் ஏலம் மூலம் கிடைக்கும் லட்சக்கணக்கான ரூபாய் அவரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில், ஒரு பெண் தொழிலாளி, தான் வேலை செய்யும் சுரங்கத்தில் எட்டு வைரக் கற்களைக் கண்டெடுத்துள்ளார். இந்த வைரங்களின் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
24
பன்னாவில் தங்கச் சுரங்கம்
பன்னா மாவட்டத்தில் உள்ள ஹசாரா முடா பகுதியில் ரச்னா கோல்டார் என்ற 50 வயது பெண், சுரங்கத்தில் வேலை செய்யும் போது இந்த வைரங்களைக் கண்டெடுத்துள்ளார்.
மொத்தம் 2.53 காரட் எடையுள்ள எட்டு வைரங்கள் அவருக்குக் கிடைத்துள்ளன. இவற்றில் ஆறு வைரங்கள் உயர்தரமானவை. இவற்றில் மிகப்பெரிய வைரத்தின் எடை 0.79 காரட்.
34
ஏலம் விடப்படும் வைரங்கள்
ரச்னாவால் கண்டெடுக்கப்பட்ட வைரங்கள் மாவட்ட வைர அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவை விரைவில் ஏலத்திற்கு விடப்படும். இதன் மூலம் ரச்னா கோல்டாருக்கு லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏல வருமானத்தில் 11% ராயல்டி மற்றும் 1% TDS உள்பட மொத்தம் 12% தொகையை அரசு வரியாக கழித்துக்கொள்ளும். மீதமுள்ள தொகை ரச்னாவுக்கு வழங்கப்படும்.
ரச்னா கோல்டார், மூன்று குழந்தைகளின் தாய் ஆவார். இவர் தனது நிதிநிலையை மேம்படுத்தும் நம்பிக்கையுடன் சுரங்கப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
பன்னாவில், எட்டு மீட்டர் சுரங்க நிலத்தை ரூ.200 செலுத்தி ஓர் ஆண்டுக்கு குத்தகைக்கு எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு கண்டெடுக்கப்படும் வைரங்களுக்கான ஏலம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும். ரச்னா கண்டெடுத்த வைரங்கள் அவரது வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்த உள்ளது.