நாளுக்கு நாள் தாயகத்தை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் இந்தியக் குடியுரிமையை விட்டுக்கொடுக்கும் நபர்களே அதிகம். சமீபத்தில், இந்தியக் குடியுரிமையை விட்டுக்கொடுத்து வெளிநாடுகளில் குடியேறியவர்களின் புள்ளிவிவரங்களை இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது. கடந்த 2023ல் 2,16,219 பேர் இந்தியக் குடியுரிமையைக் கைவிட்டுள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்திய குடியுரிமையை துறந்தவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்கது. 2023ஆம் ஆண்டை விட 2022ஆம் ஆண்டில் மொத்தம் 2,25,620 பேர் இந்தியக் குடியுரிமையைத் துறந்துள்ளனர். 2021ல் 1,63,370, 2020ல் 85,256, 2019ல் 1,44,017 பேர் இந்தியக் குடியுரிமையைக் கைவிட்டு வெளியேறினர். 2011ஆம் ஆண்டு முதல் மொத்தம் 16 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் குடியுரிமையை துறந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.