ரத்தன் டாடா இறுதிச்சடங்கில் பங்கேற்ற 94 வயது சிமோன் டாடா - யார் இவர்?

First Published | Oct 10, 2024, 11:59 PM IST

Who is Simone Tata : இன்று ரத்தன் டாடா இறந்த நிலையில், அவரது இறுதிச்சடங்கில் 94 வயது பெண்மணியான சிமோன் டாடா பங்கேற்றார்.

Simone Tata

உண்மையில் ஒட்டுமொத்த இந்தியாவும் இன்று சோகத்தில் மூழ்கி இருக்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் ரத்தன் நேவல் டாடா என்றால் அது மிகையல்ல. கடந்த 1937ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி பிறந்த ரத்தன் டாடா, நேற்று அக்டோபர் மாதம் 9ம் தேதி தனது 86வது வயதில் காலமானார். இந்தியாவை பொறுத்தவரை மக்களால் பெரிய அளவில் விரும்பப்பட்ட மிகப்பெரிய ஜாம்பவான்களில் டாடாவும் ஒருவர். மனிதர்கள் மீது மட்டுமல்லாமல் விலங்குகள் மீதும் அதீத அன்பு கொண்ட டாடாவின் மரணம் பலரது இதயங்களை கனமானதாக மாற்றியுள்ளது. 

ரத்தன் டாடாவின் உடல் அடக்கம்! இறுதி ஊர்வலத்தில் வளர்ப்பு நாய் செய்த சம்பவம்! வியந்து பார்த்த பொதுமக்கள்!

Ratan tata with his dog

டாடா விலங்குகள் மீது கொண்டுள்ள அன்பு குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய மேலாளர் ஒருவர் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டிருந்தார். அதாவது லண்டனில் இளவரசர் சார்லஸ் முன்னிலையில் சிறந்த மனிதநேயமிக்கவர் என்ற விருது டாட்டாவிற்கு வழங்கப்பட இருந்திருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை செய்ய அந்த விழா நடப்பதற்கு ஒரு நாளைக்கு முன்னால் டாட்டாவின் மேலாளர் லண்டனுக்கு சென்றிருக்கிறார். 

திடீரென டாடா தன்னால் அந்த விழாவில் பங்கேற்க முடியாது என்று மேலாளரிடம் சொல்ல, இங்கிலாந்து இளவரசர் ஏற்பாடு செய்திருக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாத அளவிற்கு என்ன பிரச்சனை என்று பயந்துபோய் டாட்டாவிடம் ஏன் வரமுடியாது என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் என்னுடைய செல்ல நாய்க்கு உடம்பு சரியில்லை, அதை தனியே விட்டு என்னால் வரமுடியாது முடியாது என்று கூறினாராம். இதை இலவச சார்லஸிடம் மேலாளர் கூறிய பொழுது, இந்த விஷயத்திற்காக தான் அவருக்கு சிறந்த மனிதநேயம் மிக்கவர் என்கின்ற விருதை வழங்க ஆசைப்படுகிறோம் என்று கூறி மகிழ்ச்சியோடு அவரது மேலாளரிடம் பரிசை கொடுத்து அனுப்பினாராம்.

Latest Videos


Naval Tata

அந்த அளவிற்கு மிகவும் எளிமையாகவும் மனிதர்கள் மீதும் விலங்குகள் மீதும் அதீத பாசத்தோடும் வாழ்ந்த மனிதன் டாட்டா என்பதால் தான் அவருடைய மறைவு மிகப்பெரிய பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் இன்று ரத்தன் டாட்டாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல முக்கிய நபர்கள் அவரது இல்லத்தில் குவிந்த நிலையில் ஸ்விஸ் நாட்டை பூர்விகமாகக் கொண்ட இந்திய பெண் தொழிலதிபர் சீமோன் டாட்டாவும் இன்று டாடாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார்.

Simone Tata

இவர் வேறு யாரும் அல்ல, மறைந்த ரத்தன் டாடாவின் சித்தி தான் அவர். சுவிட்ஸர்லாந்து நாட்டில் கடந்த 1930 ஆண்டு பிறந்தவர் அவர். அங்குள்ள ஜெனிவா பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்றவர். கடந்த 1955ம் ஆண்டு இந்தியாவிற்கு அவர் சுற்றுலா மேற்கொண்டுள்ளார். அப்பொழுது ரத்தன் டாட்டாவின் அப்பா நேவல் டாடா மீது காதல் கொண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு அவரும் இந்தியாவிலேயே செட்டில் ஆகிவிட்டார். இப்பொது டாடா குழுமத்தில் உள்ள மூத்த உறுப்பினர் இவர் தான். நேவல் மற்றும் சிமோன் ஆகிய தம்பதிக்கு பிறந்தவர் தான் நோயல் டாடா, இவர் ரத்தன் டாட்டாவின் சகோதரர் ஆவார். 1930களின் தொடக்கத்தில் ரத்தன் டாட்டாவின் தாய் சோனியை, நேவால் டாடா திருமணம் செய்துகொண்டார், அவர் இரண்டாவதாக 1955ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டவர் தான் சிமோன்.

மறக்க முடியாத வெற்றியில் ரத்தன் டாடா – டாடாவின் உதவியால் வளர்ந்த கிரிக்கெட் வீரர்கள் யார் யார் தெரியுமா?

click me!