Wayanad : வயநாடு கொடூரத்தை காட்டிய வைரல் புகைப்படம்.! இந்த 3 பேரும் உயிரோடு உள்ளார்களா.? வெளியான ஷாக் தகவல்

First Published | Aug 1, 2024, 9:38 AM IST

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் கொத்து கொத்தாக மக்கள்  மண்ணில் புதைந்துள்ள நிலையில், ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேரின் புகைப்படம் சமூகவலைதளத்தில் பரவியது. இந்த 3 பேரும் உயிர் இழந்து விட்டதாக தகவல் வெளியான நிலையில், அந்த 3 பேரின் நிலை தொடர்பாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 
 

கொத்து கொத்தாக பறிபோன உயிர்கள்

வயநாட்டின் அழகை முழுவதுமாக அழித்து விட்டது இயற்கையின் கோரதாண்டவம். கேரளாவில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி, நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாகத்தான் கேரள வரலாற்றில் இல்லாத வகையில் மிகப்பெரிய நிலச்சரிவு வயநாட்டில் ஏற்பட்டு கொத்து, கொத்தாக மனித உயிர்களை பறித்து கொண்டுசென்றுள்ளது.

தூக்கத்திலையே உயிரை பறித்த காட்டாற்று வெள்ளம்

கன மழையால் இப்படி ஒரு பேரழிவு வரும் என யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை, ஆனால் மழையால் மலையே சரிந்து வீடுகளை மூழ்கடித்துள்ளது. நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் தூக்கத்தில் இருந்தவர்கள் தூக்கத்திலையே மூச்சு விடமுடியாமல் உயிரை இழந்துள்ளனர்.

Tap to resize

மண்ணில் மூழ்கிய மனித உயிர்கள்

முண்டக்காய், சூரல்மலை, அட்டமலை, நூல்புழா ஆகிய கிராமங்களில் காட்டாற்று வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டு சகதியாக வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரும், பெரிய பெரிய பாறைகளும் மனித உயிர்களை சிதைத்துள்ளது. பல இடங்களில் மனித உடல்களின் பாகங்கள் பாதி, பாதியாகவே மீட்கப்படுகிறது. யாருடைய உடல் என்று கண்டுபிடிக்க முடியாத வகையில் உடல்கள் உருக்குலைந்து காணப்படுகிறது.

நூற்றுக்கணக்கான மக்களின் நிலை என்ன.?

தற்போது வரை 280க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்னும் நூற்றுக்கணக்கான மக்களின் நிலை என்ன என்பது கேள்வி குறியாக உள்ளது. பல இடங்களில் மனித உடல்கள் மண்ணில் புதைந்துள்ளது. இதனால் உடல்களை மீட்பதில் மிகப்பெரிய சவால் ஏற்பட்டுள்ளது. 

வைரல் புகைப்படம்

இந்த நிலையில் தான் வயநாடு கொடூரத்தை வெளிக்கொண்டு வரும் வகையில் வெளியான ஒரு குடும்ப புகைப்படம் அணைவரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. பெரிய வீட்டின் உள்ளே பாறை வந்து மோதியதில் ஏற்பட்ட பாதிப்பால் ஏற்பட்ட ஓட்டை, இதில் இருந்து சகதியாக காட்சியளிக்கும் வீடுகள் அதில் ஒரு கும்பம் அழகாக எடுத்துக்கொண்ட புகைப்படம், ஒரு சில இடங்களில் சகதி தெறித்து ஒட்டிக்கொண்டிருந்தது. 

உயிரோடு இருக்கிறோம்

இந்த புகைப்படம் பார்ப்பவர்களை கண்ணீரை வர வழைத்தது. நிலச்சரிவில் சிக்கி இந்த 3 பேரும் இறந்து விட்டதாக செய்திகள் பரவ தொடங்கியது. இந்த புகைப்படமும் வைரலானது. இந்த நிலையில் அந்த 3 பேரின் நிலை தற்போது வெளியாகியுள்ளது. நாங்கள் 3 பேரும் பாதுகாப்பாக உள்ளதாகவும், தனது இரண்டு சகோதரிகள் வெளியூரில் இருப்பதாகவும், தனது தாயுடன் தான் முகாமில் இருப்பதாக அந்த புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த தீரஜ் தெரிவித்துள்ளார். 
 

Latest Videos

click me!