இது மனிதர்களுக்குப் பரவுமா?
பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவும், குறிப்பாக கோழிப் பண்ணைகளில் வேலை செய்பவர்களுக்கு. பாதிக்கப்பட்ட கோழிகளுடன் நேரடித் தொடர்பு மற்றும் பின்னர் கண்கள் அல்லது வாயைத் தொடுவது வைரஸைப் பரப்பும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், பறவைக்காய்ச்சல் மனிதர்குக்கு பரவுவது அரிது எனவும் கூறுகின்றனர். வைரஸ் 70°C இல் இறந்துவிடும், மேலும் கோழி பொதுவாக 100°C இல் சமைக்கப்படுகிறது, இதனால் வைரஸ் அழிக்கப்படுகிறது என தெரிவித்தனர்.
அறிகுறிகள்:
மனிதர்களில் அதிக காய்ச்சல், கடுமையான தொண்டை புண், உலர் இருமல், தலைவலி, சோர்வு, உடல் வலி, மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் சிவந்த கண்கள் ஆகியவை அடங்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.