அம்பானி குடும்பத்திற்கு லக்கி Charm-ஆக வந்த மூத்த மருமகள் ஸ்லோகா மேத்தா; எப்படி தெரியுமா?

Published : Feb 14, 2025, 12:46 PM IST

Shloka Mehta is a lucky charm to Ambani Family : அம்பானி குடும்பத்திற்கு லக்கி சார்ம்மாக அவரது மூத்த மருமகளான ஸ்லோகா மேத்தா கருதப்படுகிறார். அவர் மூலமாகத்தான் குடும்பத்திற்கு ஆரோக்கியமும், அதிர்ஷ்டமும் கிடைக்கப் பெறுவதாக கூறப்படுகிறது.

PREV
16
அம்பானி குடும்பத்திற்கு லக்கி Charm-ஆக வந்த மூத்த மருமகள் ஸ்லோகா மேத்தா; எப்படி தெரியுமா?
அம்பானி குடும்பத்திற்கு லக்கி Charm-ஆக வந்த மூத்த மருமகள் ஸ்லோகா மேத்தா; எப்படி தெரியுமா?

உலக பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் முகேஷ் அம்பானி. கடந்த டிசம்பர் வரையில் முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு ரூ.9.10 லட்சம் கோடி. ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி தன்னுடைய பிஸினஸ், மனிதநேய முயற்சிகள், கலைத்திறன் மீதான் திறமை ஆகியவற்றிற்காக அதிகளவில் மதிக்கப்படுகிறார். அம்பானி குடும்பத்தைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு வரும் சொத்து சேர்ப்பதில் அதிக முக்கியத்துவம் பெறுகிறார்கள்.

26
Shloka Mehta அதிர்ஷ்டம் நிறைந்தவள்

அதையும் தாண்டி அம்பானி குடும்பத்திற்கு லக்கி சார்மாக இருப்பது அவருடைய மூத்த மருமகள். முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் மனைவி ஸ்லோகா மேத்தா ஆளுமைக்கு பெயர் பெற்றவராக கருதப்படுகிறார். ஒரு குடும்பத்தின் மூத்த மருமகள் என்பது அந்த குடும்பத்திற்கே அதிர்ஷ்டம் என்று சொல்லப்படுவதுண்டு. எண் கணிதத்தின் படி மூத்த மருமகள் நேர்மை, அதிர்ஷ்டம், ஆரோக்கியம் மற்றும் இரக்கத்தை குறிக்கும் மாஸ்டர் நம்பர் ஒரு பெண்மணியாக கருதப்படுகிறாள்.

36
மாஸ்டர் நம்பர் 11

எண் கணிததத்தில் மாஸ்டர் நம்பர் என்பது மற்ற இலக்கங்களை விட அதிக பவர்புல். அப்படி எண் கணிதத்தில் இருக்க கூடிய மாஸ்டர் எண்கள் என்பது 11, 22 மற்றும் 33 ஆகியவை ஆகும். இதன் மூலமாக அம்பானி குடும்பத்திற்கு ஸ்லோகா மேத்தா ஒரு அதிர்ஷ்டம் நிறைந்தவராக பார்க்கப்பட ஒரு முக்கிய காரணம் ஒன்று உண்டு. அதாவது, ஸ்லோகா மேத்தாவின் பிறந்த தேதி 1990 ஜூலை 11. இதில் 11 என்பது மாஸ்டர் நம்பர்.

46
அம்பானி குடும்பத்திற்கு லக்கி Charm-ஆக வந்த மூத்த மருமகள் ஸ்லோகா மேத்தா; எப்படி தெரியுமா?

எண்களைப் பற்றிய தொகுப்பாய்வு தான் எண் கணிதம். இது ஆன்மீகத்தின் மகத்துவம், ஒருவரது தனிப்பட்ட குண நலன்கள், மறைக்கப்பட்ட ரகசியகங்கள் ஆகியவற்றை வெளிக்காட்டுகிறது. எண் கணிதத்தைப் பற்றி நீங்கள் முழுமையாக அறிந்திருந்தால் உங்களுக்கு மாஸ்டர் நம்பர் என்று சொலல்ப்படும் 11ன் மகத்துவம் பற்றி தெரிந்திருக்கும். மாஸ்டர் நம்பர் 11 என்பது மனிதாபிமான, அறிவு, அதிர்ஷ்டம், ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது.

56
அம்பானி குடும்பத்திற்கு லக்கி Charm-ஆக வந்த மூத்த மருமகள் ஸ்லோகா மேத்தா; எப்படி தெரியுமா?

அம்பானியின் இளைய மருமகளான ராதிகா மெர்ச்சண்ட் கூட ஸ்லோகா மேத்தா பற்றி திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களின் போது மிகவும் அன்பானவர், அற்புதமானவர் என்றும், அவர் இல்லை என்றால் நான் இங்கு இல்லை என்றும் அவர் கூறியிருந்தார். ஜோதிடத்தில் 1 என்பது சூரியனைக் குறிக்கிறது. ஆகையால், 11ஐ பிறந்த தேதியை கொண்டவர்கள் சூரியனுக்கு இணையான பண்புகளை பெற்றிருப்பார்கள். அதாவது, அவர்களிடம் நேர்மை, பொறுமை, உழைப்பு, அதிர்ஷ்டம், ஆரோக்கியம் என்று எல்லாமே நிறைந்திருக்கும்.

66
ஸ்லோகா மேத்தா:

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகாஷ் அம்பானி மற்றும் ஸ்லோகா மேத்தா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். இருவருமே பள்ளி பருவம் முதலே காதலித்து வந்துள்ளனர். இவர்களுக்கு பிருத்வி மற்றும் வேதா என்று 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். ஸ்லோகா மேத்தாவின் பெற்றோர்கள் ரஸ்ஸால் மேத்தா மற்றும் மோனா மேத்தா. இதில் ரஸ்ஸல் மேத்தா ரோஸி ப்ளூ இந்தியாவின் நிர்வாக இயக்குநர். இவருடைய மற்றொரு மகள் திவ்யா மேத்தா ஜாடியா. இவர், அம்பானி மருமகளின் ஸ்டைலிஸ்டாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories