காஷ்மீர் விவகாரத்தில் நாட்டாமை செய்ய மாட்டோம்... அடியோடு மனம் மாறிய ட்ரம்ப்..! பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி

Published : Sep 25, 2025, 11:03 AM IST

அமெரிக்காவின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறிக்கிறது. இந்த ஆண்டு மே மாதம், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான விரோதத்தை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய முன்வந்தார், இந்த முடிவை இந்தியா நிராகரித்தது. 

PREV
14

டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பார்கள்... இந்தியாவுடனான உறவுகள் குறித்து அமெரிக்கா முக்கிய அறிக்கையை வெளியிடுகிறது, காஷ்மீர் தொடர்பான மத்தியஸ்தத்திலிருந்து தன்னை விலக்கிக் கொள்கிறது, பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி

இந்தியாவுடனான உறவுகள் ராஜதந்திர ஏற்ற தாழ்வுகளைக் கடந்து செல்வதை அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. இருந்தபோதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வலுவாக உள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். பிரதமர் மோடிக்கும், ஜனாதிபதி டிரம்புக்கும் இடையிலான சந்திப்பு குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரியும் நேர்மறையான உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள குழப்பம் பெரும்பாலும் அமெரிக்காவால் ஏற்பட்டதாக அவர் கூறினார். ஆனாலும், கூட்டாண்மை நேர்மறையான திசையில் நகர்கிறது என்று அவர் எனத் தெரிவித்துள்ளார்.

24

குவாட் தலைவர்களின் உச்சிமாநாட்டிற்கான தேதியை நிர்ணயிப்பது குறித்தும் விவாதங்கள் நடந்து வருவதாக அதிகாரி கூறினார். இந்த உச்சிமாநாடு இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறலாம். "நீங்கள் மோடியும், டிரம்பும் சந்திப்பதை காண்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர்களுக்கு மிகவும் நேர்மறையான உறவு உள்ளது. எங்களிடம் குவாட் உச்சி மாநாடு உள்ளது. அதன் திட்டங்களில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். அது ஒரு கட்டத்தில் நடக்கும். இந்த வருடம் இல்லையென்றால், அடுத்த வருடம். நாட்களை குறித்து வருகிறோம்’’ " என்று அந்த அதிகாரி கூறினார்.

34

இந்தியாவின் ரஷ்ய எரிசக்தி கொள்முதல் குறித்து ஒரு அமெரிக்க அதிகாரி ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டார். இந்த பிரச்சினையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகள் நேர்மறையாக முன்னேறி வருவதாக உறுதிப்படுத்தினார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் தொடர்பாக, காஷ்மீர் பிரச்சினையில் டிரம்ப் நிர்வாகம் மத்தியஸ்தம் செய்ய விரும்பவில்லை என்று அவர் கூறினார். இருப்பினும், அமெரிக்காவிடம் உதவி கேட்டால் ஜனாதிபதி டிரம்ப் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

44

அந்த அதிகாரி, "இது இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான நேரடி விஷயம் என்பதும் அதில் தலையிட மாட்டோம் என்பதும் எங்கள் நீண்டகால கொள்கை. எங்களிடம் உதவி கேட்டால், ஒவ்வொரு பிரச்சினையிலும் அவர் செய்வது போலவே ஜனாதிபதியும் தயாராக இருக்கிறார். ஆனால் அவர்களுக்கு ஏற்கனவே பல நெருக்கடிகள் உள்ளன. இது இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான விஷயம்" எனத் தெரிவித்துள்ளார். அந்த அதிகாரியின் அறிக்கை அமெரிக்காவின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறிக்கிறது. இந்த ஆண்டு மே மாதம், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான விரோதத்தை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய முன்வந்தார், இந்த முடிவை இந்தியா நிராகரித்தது.

Read more Photos on
click me!

Recommended Stories