ட்ரம்பின் பைத்தியக்காரத்தனம்... இந்தியாவுக்கு தோண்டிய குழியில் குப்பிற கவிழப்போகும் அமெரிக்கா..!

Published : Sep 20, 2025, 12:04 PM IST

டிரம்பை ‘இந்தியாவின் எதிரி’ என உருவகப்படுத்துகிறார்கள். இந்தியாவை இழந்தால் அது அமெரிக்கா தோல்வி,  டிரம்பின் இந்த செயல்கள் அவரது ஈகோவை காட்டுவதாகக் கூறுகிறார்கள். ஆனால் இது உள்நாட்டு உற்பத்தி, ஆராய்ச்சியால் அமெரிக்காவின் இழப்பு, இந்தியாவின் லாபம்

PREV
15

வெளிநாட்டவர் அமெரிக்காவில் பணிபுரிய உதவும் H-1B விசாவிற்கான விண்ணப்பக் கட்டணத்தை சுமார் ரூ.88 லட்சம் ஆக உயர்த்த அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்க வேலைவாய்ப்பில் வெளிநாட்டவரின் தாக்கத்தை தடுப்பதற்காக இந்த அதிரடி நடவடிக்கையை டிரம்ப் முன்னெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முடிவு மில்லியன் கணக்கான வெளிநாட்டு நிபுணர்களை, குறிப்பாக H-1B விசாக்களை பெரிதும் நம்பியுள்ள இந்திய ஐடி மற்றும் தொழில்நுட்பத் துறையை பாதிக்கலாம். உண்மையில், தனிநபர்கள் தாங்களாகவே H-1B விசாவைப் பெற முடியாது.அதைப் பெற, ஒரு அமெரிக்க நிறுவனம் தேவை.

அந்த நிறுவனம் அமெரிக்க அரசாங்கத்திடம் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கிறது, அதற்கு ஒத்த திறன்களைக் கொண்ட ஒரு ஊழியர் தேவை என்று கூறுகிறது. நிறுவனம் அனைத்து ஆவணங்களையும் நிரப்பி அரசாங்கத்திற்கு ஒரு கட்டணத்தை செலுத்துகிறது. இதுவரை, இந்தக் கட்டணம் மிகக் குறைவாக இருந்தது. ஆகையால் பல பெரிய ஐடி நிறுவனங்களும், ஆலோசனை நிறுவனங்களும் லட்சக்கணக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தன.

25

இந்நிலையில் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் பதவியில் அமர்ந்து கொண்டு பல முட்டாள்தனமான, பைத்தியக்கரத்தனமான முடிவுகளை எடுத்து வருகிறார் என உலக நாடுகள் அனைத்த்ம் விமர்சித்து வருகின்றன.

டொனால்ட் டிரம்ப், 2025-ல் அமரிக்க அதிபராக தனது இரண்டாவது பதவிக்காலத்தை தொடங்கியவுடன், அவரது முடிவுகளும், பேச்சுக்களும் உலகெங்கும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகின்றன. அவரது செயல்கள் அமெரிக்காவின் உள்நாட்டு, வெளிநாட்டு கொள்கைகளை குழப்பி வருகின்றன. பலர் அவரது ‘முட்டாள்தனம்’ என்று விமர்சிக்க வைத்துள்ளன.

டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்தியாவுடனான உறவுகளை அவரது கொள்கைகளால் சீர்குலைத்து வருகிறார். 2017-2021-ல் அவரது முந்தைய ஆட்சியில் இந்தியாவுடன் நல்லுறவு இருந்தாலும், இப்போது வர்த்தகம், விசா கொள்கை, ரஷ்யா தொடர்பான அழுத்தங்களால் இந்தியா பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இவை அவரது பைத்தியக்காரத்தனம் என்று விமர்சிக்கப்படுகிறது. ஏனென்றால் இது அமெரிக்கா தனது போட்டியாளரான சீனாவுக்கு எதிரான உத்தியை பலவீனப்படுத்துகிறது. இந்தியாவை இழந்தால், அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் உத்தி தோல்வியடையும்.

35

டிரம்பின் இந்தியாவுக்கு எதிரான சமீப கால செயல்பாடுகள் இந்தியாவின் பொருளாதாரம், வெளியுறவுகள், இளைஞர்களின் வாய்ப்புகளை பாதிக்கின்றன.ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக 25 சதவிகிதம் மேலும் 25 சதவிகிதம் என 50 சதவிகிதம் வரி விதித்தார். இந்தியாவுடன் வர்த்தகத் தடைகளை அதிகரித்தது திருப்பூர் ஜவுளி, தூத்துக்குடி கடல் உணவு ஏற்றுமதியை பாதித்து, 1.35 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கச் செய்தது. இதனால் இந்தியாவின் ஏற்றுமதி 7 லட்சத்து 60 ஆயிரம் பாதிக்கும். பொருளாதார வளர்ச்சி மந்தமடையும். இந்தியா இதை அநியாயமானது என்று கண்டித்தது. இந்தியாவை இநண்நயாவை போதைப்பொருள் கடத்தும் நாடு என்று டிரம்ப் பேசியது சர்வதேச அவமானத்தை ஏற்படுத்தியது. ஆனால் பிரதமர் மோடி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை

H-1B விசாவுக்கு புதிதாக 88 லட்சம்0 கட்டணம் விதித்து, இந்திய ஐடி ஊழியர்களை குறி வைத்துள்ளார். இதனால், இந்தியாவின் ஐடி துறைபாதிக்கும். 10 லட்சம் இந்தியர்களின் வேலைவாய்ப்பு குறையும். இந்தியா-ரஷ்யா-சீனா ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொண்டதால் ‘இந்தியாவையும், ரஷ்யாவையும் சீனாவிடம் இழந்தோம்" என்று கூறிய டிரம்ப் பின்னர் ‘மோடி எனது நண்பன்" என்று மழுப்பினார்.

45

பாகிஸ்தான்-இந்தியா இடையே ஏற்பட்ட சிந்தூர் ஆபரேஷன் மோதலை ‘நான்தான் நிறுத்தினேன்’ என்று வாலண்டரியாக வந்து 40 முறை கூறி தற்பெருமை அடித்துக் கொண்டார் ட்ரம்ப். ஆனால், இந்தியா இதை மறுத்தது. இது இந்தியாவின் காஷ்மீர் நிலைப்பாட்டை பலவீனப்படுத்தியது. பிரிக்ஸ் ‘அமெரிக்காவுக்கு எதிரானது’ என்று கூறி, 10 சதவிகித வரி விதித்தார். ரஷ்ய எண்ணெய் வாங்குவதால் "உக்ரைன் கொலைக்கு இந்தியா உதவுகிறது’ என்று குற்றம் சாட்டினார் டிரம்ப். இது இந்தியா பிரிக்ஸ் உறுப்பினராக இருப்பதற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனால், ஐரோப்பா, இந்தியாவுக்கு 100 சதவிகிதன் வரி விதிக்க தூண்டி விட்டார் டிரம்ப்.

இந்தியாவில் உற்பத்தி செய்யாதீர்கள், அமெரிக்காவில் செய்யுங்கள் என ஆப்பிள் நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுத்தார் டிரம்ப். இது ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியாகவும், இந்தியாவின் உற்பத்தி ஹப் கனவை பலவீனப்படுத்துவதாகவும் கருதப்பட்டது.

55

இந்தியா, சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடு. ஆனால் டிரம்பின் அழுத்தங்கள் இந்தியாவை ரஷ்யா-சீனா-பிரிக்ஸ் நாடுகளை நோக்கி தள்ளுகின்றன. "அமெரிக்கா உலகின் மற்றொரு பகுதியை ஒன்றிணைக்கிறது" என விமர்சிக்கப்படுகிறது. இது டிரம்பின் அறிவில்லாத செயல் என்கிறார்கள். இந்தியா அமைதி காத்து "தேசிய நலனைப் பாதுகாப்பதே முக்கியம்" என்று கூறி வருகிறார் பிரதமர் மோடி.

பலர் டிரம்பை ‘இந்தியாவின் எதிரி’ என உருவகப்படுத்துகிறார்கள். இந்தியாவை இழந்தால் அது அமெரிக்கா தோல்வி என்றும் புத்திமதி சொல்கிறார்கள். டிரம்பின் இந்த செயல்கள் அவரது ஈகோவை காட்டுவதாக சொல்கிறார்கள். ஆனால் இது உள்நாட்டு உற்பத்தி, ஆராய்ச்சியால் அமெரிக்காவின் இழப்பு, இந்தியாவின் லாபம்" என்றும் சிலர் சொல்கின்றனர். இந்தியா தனது தன்னிச்சையை தக்கவைத்துக்கொண்டு, பிரிக்ஸ், ஐரோப்பா உடனான உறவுகளை வலுப்படுத்த வேண்டும். இது டிரம்பின் ‘முட்டாள்தனம்’ அமெரிக்காவை தனிமைப்படுத்தும் என்பது தெளிவாகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories