இன்றைய TOP 10 செய்திகள்: பீகாரில் ஸ்டாலின் சூளுரை... டிரம்ப் அழைப்பை மறுத்த மோடி...

Published : Aug 27, 2025, 11:13 PM IST

ராகுல் நடைபயணத்தில் ஸ்டாலின் கலந்துகொண்டது, ட்ரம்ப் மோடியை தொடர்புகொள்ள முயற்சித்தது, மகளிர் உரிமைத் தொகை அறிவிப்பு, ஐபிஎல் தொடரிலிருந்து அஸ்வின் ஓய்வு என பல பரபரப்பான செய்திகள் இன்றைய TOP 10 இல் வெளியாகியுள்ளன.

PREV
110
மோடியை அலற விட்ட ஸ்டாலின்!

பீகாரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் புதன்கிழமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ''மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி எழுச்சி பெற்றதால் பாஜக 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று மைனாரிட்டி அரசாக உள்ளது. இதேபோல் பீகாரிலும் ராகுல் காந்தியும், தேஜஸ்வி யாதவ்வும் இணைந்து மிகப்பெரிய வெற்றியை பெறுவார்கள். பீகாரில் இவர்கள் இருவரும் பெறப்போகும் வெற்றி இந்தியா கூட்டணியின் அடுத்தடுத்த வெற்றிகளுக்கு அடித்தளமாக அமையப் போகிறது" என்றார்.

210
பொதுமக்களுக்கு சர்ப்ரைஸ்

ஆவணி மாத சுபமுகூர்த்த தினங்களான ஆகஸ்ட் 28 மற்றும் 29 தேதிகளில் கூடுதல் பத்திரப்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இடம் மற்றும் காலி மனைகளை வாங்கும் போது நல்ல நாட்கள் சுபமுகூர்த்த நாள் மற்றும் நல்ல நேரம் என்று பார்த்து வாங்குவது தமிழர்களின் வழக்கம். அதன்படி தமிழகத்தில் சுபமுகூர்த்த தினங்களில் அதிகளவில் பத்திரப்பதிவு நடப்பது வழக்கம். ஒவ்வொரு சுபமுகூர்த்த தினகங்களிலும் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கப்படுகின்றன. இந்நிலையில் ஆவணி மாதத்தின் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

310
ட்ரம்பின் அழைப்பை ஏற்க மறுத்த மோடி

இந்தியா மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி இன்று அமலுக்கு வந்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரத்தில் ட்ரம்ப் பிரதமர் மோடியை தொடர்புகொள்ள 4 முறை முயற்சித்ததாகவும், ஆனால் அவருடன் பேச பிரதமர் மோடி மறுத்துவிட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

410
பெண்களுக்கு வரப்போகும் குஷியான அறிவிப்பு!

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த பெண்களுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக அரசு குஷியான அறிவிப்பை வெளியிட உள்ளது.

தமிழக அரசு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டம் என்ற பெயரில் குடும்ப அட்டை வைத்துள்ள, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கி வருகிறது. இந்த 1,000 ரூபாய் தகுதியான பெண்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் மாதம்தோறும் செலுத்தப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள், அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், குறிப்பிட்ட நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோரைத் தவிர மற்ற குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

510
அதிமுகவை RSS வழிநடத்துவதில் என்ன தவறு?

சென்னை கோயம்பேட்டில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறாத முதல்வர் ஸ்டாலின், ஐயப்ப பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதை எல்.முருகன் கடுமையாக விமர்சித்தார்.

610
மலைகோட்டை அதிரும் பாக்குறீங்களா?

செய்தியாளர்களிடம் பேசிய நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான், “தவெக மாநாட்டில் கூடிய கூட்டம் பற்றி பேசுகிறீர்கள், பிப்ரவரி 7ல் திருச்சியில் மாநாடு நடத்துகிறேன். அப்பொழுது கூடும் கூட்டத்தைப் பாருங்கள். மாநாடு என்றால் எப்படி நடத்த வேண்டும்? எப்படி உரையாற்ற வேண்டும்? எத்தனை லட்சம் பேர் கூடுகிறார்கள் என்று அப்போது பாருங்கள்.” எனக் கூறினார்.

710
31 பக்தர்கள் பலியான சோகம்!

ஜம்மு-காஷ்மீரில் கனமழை தொடர்ந்து கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் மழை மற்றும் நிலச்சரிவில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைஷ்ணோ தேவி கோயிலுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட நிலச்சரிவில் மட்டும் 31 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தாவி, செனாப் நதிகளில் நீர்மட்டம் ஆபத்தான அளவைத் தாண்டியுள்ளது.

810
உயிரைப் பறித்த ChatGPT

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) காரணமாகத் தங்கள் மகன் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி, அமெரிக்காவில் பெற்றோர்கள் ஒரு முக்கிய வழக்கைத் தொடுத்துள்ளனர். 16 வயதுடைய தங்கள் மகனின் தற்கொலைக்குக் காரணமான ChatGPT-ஐ உருவாக்கிய Open-AI நிறுவனம் மற்றும் அதன் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் (Sam Altman) மீது அவர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

910
ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று திடீரென அறிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அஸ்வின், ''ஒவ்வொரு முடிவிலும் ஒரு புதிய துவக்கம் இருக்கும் என்று சொல்வார்கள். ஒரு ஐபிஎல் கிரிக்கெட் வீரராக எனது பயணம் இன்றுடன் முடிவடைகிறது. ஆனால், பல்வேறு லீக்குகளில் விளையாடும் எனது பயணம் இன்று தொடங்குகிறது'' என்று தெரிவித்துள்ளார்.

1010
சுப்மன் கில், ரோகித் சர்மா டாப்!

ஐசிசி ஓடிஐ ரேங்கில் ரோகித் சர்மா, சுப்மன் கில் டாப்பில் உள்ளனர். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் மற்றும் கேமரூன் கிரீன் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் அசத்தலான ஆட்டத்திற்குப் பிறகு, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களான டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் புதன்கிழமை ICC ஆண்கள் ஒருநாள் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories