இன்றைய TOP 10 செய்திகள்: ராமதாஸ் தீர்மானம் முதல் பாஜகவின் அதிரடி அறிவிப்பு வரை

Published : Aug 17, 2025, 10:43 PM IST

இந்திய துணை ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு, பாமகவில் ராமதாஸ் அதிரடி, திருமாவளவன் கருத்து, எடப்பாடி பழனிசாமிக்கு நேர்ந்த அசம்பாவிதம், டிரம்ப்-புடின் சந்திப்பு என பரபரப்பான அரசியல் சம்பவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

PREV
110
சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளர்!

தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) சார்பில் துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை பாரதிய ஜனதா கட்சி (BJP) அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

210
பாமக விதிகளை மாற்றி ராமதாஸ் அதிரடி

அன்புமணிக்கு போட்டியாக ராமதாஸ் தரப்பு சார்பில் பொதுக்குழு கூட்டம் புதுச்சேரியில் உள்ள சங்கமித்ரா அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமகவின் தலைவர் ராமதாஸ் தான் என்றும் தேர்தல் கூட்டணி மற்றும் கட்சி தொடர்பான அனைத்து நடவடிக்கையும் அவர் தான் மேற்கொள்வார் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்தம் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் பொதுக்குழுவுக்கு நிறுவனர் அழைக்கப்பட வேண்டும் என்ற விதியில் திருத்தம் செய்து பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

310
பணி நிரந்தரம் செய்யக்கூடாது

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது என்று அவர் பேசியிருப்பதுபுதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்ற தமது பிறந்தநாள் விழாவில், அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

410
அன்புமணி ராமதாஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரிக்கு அருகில் உள்ள விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில், கட்சியின் முன்னாள் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை குழுவின் சார்பாக 16 குற்றச்சாட்டுகளை ஜி.கே. மணி பட்டியலிட்டார்.

510
நூலிழையில் தப்பிய இபிஎஸ்..!

திருவண்ணாமலையில் பிரச்சார பயணத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமியின் பேருந்தின் அருகே பிரம்மாண்ட வரவேற்பு ஆர்ச் சரிந்து விழுந்தது. நூலிழையில் எடப்பாடியின் வாகனம் தப்பியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

610
அரசியல் சாசன அவமதிப்பு

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் முறைகேடு நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியலமைப்புக்கு இழைக்கப்பட்ட அவமானம் எனவும் தேர்தல் ஆணையர் கூறினார்.

710
தீபாவளிக்கு டபுள் போனஸ்

இந்த ஆண்டு தீபாவளிக்கு இந்திய மக்களுக்கு "இரட்டை போனஸ்" காத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், டெல்லியின் உள்கட்டமைப்பு வளர்ச்சி, சமூக நீதி மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து விரிவாகப் பேசினார்.

810
போர் முடிவுக்கு வழி பிறக்குமா?

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க வாஷிங்டன் சென்றுள்ளார். டிரம்ப், புடினை சந்தித்த பிறகு, நாளை இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்வு எட்டப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

910
டூப்பை அனுப்பி வைத்த புடின்?

அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சந்தித்தார். ஆனால், இந்த சந்திப்பில் கலந்துகொண்டவர் உண்மையான விளாடிமிர் புடின் இல்லை என்றும், அவருடைய 'உடல் இரட்டையர்களில்' (Body double) ஒருவர் தான் என்றும் சதி கோட்பாட்டாளர்கள் மத்தியில் ஒரு புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

1010
திருமலையில் பெண்களுக்கு இலவச பேருந்து

ஆந்திர பிரதேசத்தில் பெண்கள் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் இலவச பேருந்து சேவை நடைமுறையில் வந்துள்ளது. மாநிலத்தின் பல பெண்கள் இதற்காக பயணித்து வருகின்றனர். ஆனால், சில விதிமுறைகள் தெளிவாகவும் வந்துள்ளன. குறிப்பாக திருமலைவை நோக்கி பயணிப்பவர்களுக்கு இது பொருந்தாது என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories