உலகின் டாப் 10 மாசடைந்த நகரங்கள்.. லிஸ்ட்டில் 7 இந்திய இடங்கள்.. டெல்லி இல்லை!

Published : Oct 24, 2026, 02:32 PM IST

Top 10 Most Polluted Cities: உலகின் டாப் 10 மாசடைந்த நகரங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 7 இந்திய நகரங்கள் உள்ளன. ஆச்சரியப்படும்விதமாக தலைநகர் டெல்லி இந்த பட்டியலில் இல்லை.

PREV
14
உலகின் டாப் 10 மாசடைந்த நகரங்கள் பட்டியல்

தசரா பண்டிகைக்குப் பிறகு டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகளும் அமலில் உள்ளன. இந்த நிலையில் அக்டோபர் 24 அன்று அதாவது இன்று உலக அளவில் அதிக மாசடைந்த நகரங்களின் பட்டியல் வெளியானது. இந்த பட்டியலில் இந்தோனேசியாவின் சம்பித் (Sampit) நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. எப்போதுமே காற்று மாசில் சிக்கித் தவிக்கும் டெல்லி, இந்த முறை டாப் 10 பட்டியலில் இல்லை. ஆனால், இந்தியாவின் 7 நகரங்கள் இந்த டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

ஆச்சரியப்படும் விதமாக, டாப் 25 பட்டியலில் கூட டெல்லி இல்லை. அங்கு எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளே இதற்கு முக்கியக் காரணம். இந்தப் பட்டியலில் மும்பை 17வது இடத்திலும், நவி மும்பை 22வது இடத்திலும் உள்ளன. நல்லவேளையாக தமிழகத்தின் எந்த நகரமும் டாப் 25 பட்டியலில் இடம்பெறவில்லை.

24
இந்திய நகரங்கள் ஆக்கிரமிப்பு

அதிக மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களை இந்தோனேசிய நகரங்கள் உள்ளன. சம்பித், பொன்டியானாக் (Pontianak), பலங்கராயா (Palangkaraya) ஆகிய நகரங்கள் டாப் 3 இடங்களில் உள்ளன. டாப் 10 பட்டியலில் மீதமுள்ள 7 இடங்களும் இந்திய நகரங்களுக்கே கிடைத்துள்ளன. இன்னும் கொடுமை என்னவென்றால், டாப் 25 பட்டியலில் முதல் 3 இடங்களைத் தவிர, மற்ற அனைத்து இடங்களிலும் இந்திய நகரங்களே ஆக்கிரமித்துள்ளன.

அதிக மாசடைந்த டாப் 10 நகரங்கள் லிஸ்ட்

1. சம்பித், இந்தோனேசியா

2. பொன்டியானாக், இந்தோனேசியா

3. பலங்கராயா, இந்தோனேசியா

4. காசியாபாத், உத்தரப் பிரதேசம், இந்தியா

5. பானிபட், ஹரியானா, இந்தியா

6. மீரட், உத்தரப் பிரதேசம், இந்தியா

7. ஃபரித்கோட், பஞ்சாப், இந்தியா

8. பதிண்டா, பஞ்சாப், இந்தியா

9. ஹாபூர், உத்தரப் பிரதேசம், இந்தியா

10. பிவாண்டி, மகாராஷ்டிரா, இந்தியா

34
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை

உலக அளவில் பல நகரங்கள் காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், அதிக மாசடைந்த நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் முக்கிய நகரங்களே அதிகம் உள்ளன. டெல்லியில் அமல்படுத்தப்பட்ட கடுமையான விதிகளால் அங்கு மாசு மெதுவாகக் குறைந்து வருகிறது.

ஆனால், இப்போது புது கவலை ஒன்று எழுந்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. அதேபோல, பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பயிர் அறுவடை செய்யும் நேரமும் வந்துவிட்டது. இதனால், பக்கத்தில் உள்ள டெல்லியில் மீண்டும் காற்று மாசு கடுமையாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

காற்று மாசைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளுடன், பொதுமக்களும் தனிப்பட்ட முறையில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்ப்பது மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது போன்ற விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே இந்த நச்சுப் புகைக் காலகட்டத்திலிருந்து தப்பிக்க முடியும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

44
தமிழ்நாட்டு மக்களுக்கு ஆறுதல்

தமிழ்நாடு இந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்பது மாநில மக்களுக்கு ஒரு நிம்மதியான செய்தி என்றாலும், காற்று மாசு விவகாரத்தில் நாம் முழுமையாகப் பாதுகாப்பானவர்களாக இருக்கிறோம் என்று அர்த்தமல்ல. சென்னை போன்ற முக்கிய நகரங்களில் வாகனப் பெருக்கம், தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் கட்டுமானப் பணிகள் காரணமாக அவ்வப்போது காற்றுத் தரம் மிதமான அல்லது மோசமான நிலையை எட்டிவிடுகிறது.

எனவே, இந்தியாவின் பிற மாநிலங்கள் போல கடுமையான காற்று மாசுப் பாதிப்புகளைத் தமிழ்நாடு எதிர்கொள்ளாமல் இருக்க, இப்போதே உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பசுமைப் பாதுகாப்பு முயற்சிகளையும் தீவிரப்படுத்துவது அவசியமான ஒன்றாகும்.

Read more Photos on
click me!

Recommended Stories