தீபாவளிக்கு இன்னும் ஒன்றரை மாதம் மட்டுமே உள்ளது. வேலை நிமித்தமாக வெளியூர்களில் வசிப்பவர்கள் தீபாவளிக்கு தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட சொந்த ஊர்களுக்குத் திரும்புவார்கள். பண்டிகைக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்துவிடுவார்கள்.
ஆனால் பல நேரங்களில் டிக்கெட் முன்பதிவு தாமதமாகிறது. பிறகு தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதும் கடினமாக உள்ளது. வெளிமாநிலங்களின் இருந்து தமிழகம் வர ரயில் டிக்கெட் பெறுவது சாத்தியமில்லாதது போலத் தெரிகிறது. ஆனால் அவர்கள் 3 டிபஸ் ட்ரை பண்ணினால் கண்டிப்பாக டிக்கெட் கன்ஃபார்ம் ஆகிவிடும்.
ரயில்வேயின் ஐஆர்சிடிசி (IRCTC) செயிலையை டவுன்லோட் செய்து ஒரு கணக்கு தொடங்கவும். அல்லது ஏற்கெனெவே கணக்கு வைத்திருப்பவர்கள் உள்நுழையவும். டிக்கெட் முன்பதிவு செய்யும்போது தேர்ந்தெடுக்கும் வழித்தடம், பயணிகள் பெயர், வயது, விருப்பமான பெர்த், ரயில் எண்கள் போன்ற அனைத்துத் தகவல்களையும் முன்கூட்டியே அப்ளிகேஷனில் சேமித்து வைக்கவும்.
இந்த விவரங்களை முன்கூட்டியே பதிவுசெய்து வைப்பதன் மீண்டும் மீண்டும் ரயில் டிக்கெட் புக்கிங் தொடர்பான தகவல்களைத் தேட வேண்டிய அவசியமில்லை, டிக்கெட் முன்பதிவு செய்வதை வேகமாகச் செய்து முடிக்கலாம்.
குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் பயணம் செய்வதற்கு முன் அவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலைத் தயாரித்துக்கொள்ளவும். அனைத்து பயணிகளின் பெயர்கள், பெர்த் போன்ற தகவல்கள் அதில் இருப்பதை உறுதிசெய்யுங்கள். ஐஆர்சிடிசி செயலியில் ப்ரொஃபைல் பகுதியில் இந்தப் பட்டியலை உருவாக்கலாம்.
இவ்வாறு பயணிகள் பட்டியலை உருவாக்கி வைத்துக்கொள்வது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது நேரத்தை மிச்சப்படுத்தும். ஒவ்வொரு முறையும் எல்லா பயணிகளின் தகவல்களை மீண்டும் மீண்டும் நிரப்பிக் கொண்டிருக்கத் தேவை இருக்காது.
ஆன்லைனின் டிக்கெட் முன்பதிவுக்கும்ப் பணம் செலுத்தும்போது UPI வாலட் பயன்படுத்தவும். UPI வாலட் மூலம் பணம் செலுத்துவது விரைவாகவும் எளிதாகவும் இருக்கும். மேலும் சீக்கிரமாக பேமெணெட்டை முடித்துவிடலாம். இன்டர்நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்து முன்பதிவு செய்தால், லாக்-இன் செய்வது, பாஸ்வேர்டை சரியாக டைப் செய்வது, OTP க்குக் காத்திருப்பது என அதிக நேரம் ஆகலாம்.
இன்னொரு வாய்ப்பாக ஐஆர்சிடிசி செயலியிலேயே உள்ள இ-வாலட்டை பயன்படுத்தி பணம் செலுத்தலாம். இ-வாலட்டில் டெபாசிட் செய்யும் பணத்தை எப்போது வேண்டுமானாலும் ரயில் டிக்கெட் புக் செய்ய பயன்படுத்தலாம். இது நெட் பேங்கிங்கிற்கான நேரத்தை மிச்சப்படுத்தும். இன்னொரு வழியாக இருக்கும். இந்த வழிகளில் தீபாவளி டிக்கெட் புக் செய்ய முயன்றால் உறுதியான டிக்கெட் கிடைக்கும் வாய்ப்பு மிக அதிகம்.