நாடு முழுவதும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும் தான் மருத்துவ படிப்பில் சேர முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால் இதற்கு சில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் அளவிற்கு நீட் எதிர்ப்பு முக்கியமானதாக இருக்கிறது. திமுக, அதிமுக என இரு கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டில் ஒருசேரப் பயணிக்கின்றன.
24
தமிழக அரசு சட்டப்போராட்டம்
மேலும் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர அனுமதிக்கப்பட்ட நிலையில், நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நுழைவுத் தேர்வை மாநில அரசே நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் சட்டப்போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
34
ஜீரோ, மைனஸ் மதிப்பெண் பெற்றவர்களுக்கும் இடம்
இது ஒருபுறம் இருக்க, மருத்துவ படிப்பில் சேர இளநிலை நீட் தேர்வு, முதுநிலை நீட் தேர்வு என இரு வகைகளாக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர முடியும். நீட் தேர்வில் 50 சதவீத கட் ஆப் பெற்றால் மட்டுமே முதுநிலை மருத்துவப் படிப்பில் தொடர முடியும். ஆனால் தற்போதுவெளியாகி உள்ள தகவல்களின் படி நீட் தேர்வில் பூஜ்ஜியம் மற்றும் மைனஸ் மதிப்பெண் பெற்ற 27 நபர்கள் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.
முதுநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் காலி இடங்கள் அதிகரித்துள்ளதால் பூஜ்ஜிய சதவீதம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே ஜீரோ மற்றும் மைனஸ் மதிப்பெண் பெற்றவர்களும் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.