எங்கள் வீட்டை இடித்து விட்டனர்! இனி எங்கு போவோம்! பஹல்காம் பயங்கரவாதியின் தாய் கண்ணீர் பேட்டி!

Published : Apr 25, 2025, 01:27 PM IST

தங்கள் வீட்டை இடித்து விட்டதாக பஹல்ஹாம் தாக்குதல் பயங்கரவாதியின் தாய் கண்ணீர்மல்க பேட்டியளித்து இருக்கிறார்.

PREV
14
எங்கள் வீட்டை இடித்து விட்டனர்! இனி எங்கு போவோம்! பஹல்காம் பயங்கரவாதியின் தாய் கண்ணீர் பேட்டி!

Pahalgam terrorist's mother's tearful interview: தன் மகன் உயிருடன் இருந்தால், உடனடியாக சரணடைய வேண்டும் என்று பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய ஆதில் உசைனின் தாய் ஷெஹசாதா கூறியுள்ளார். தன் மகனைப் பற்றி எட்டு வருடங்களாக எந்த தகவலும் இல்லை என்றும், அவன் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டாலும் கவலையில்லை என்றும் ஷெஹசாதா தெரிவித்துள்லார். பஹல்காமில் அப்பாவி மக்கள் 26 பேரின் உயிரை பறித்த தாக்குதலில் தொடர்புடைய இரண்டு உள்ளூர் பயங்கரவாதிகளில் ஒருவன் ஆதில் உசைன். மற்றொருவன் ஆசிஃப். 

24
Pahalgam Terror Attack

இனி நாங்கள் எங்கு செல்வோம் 

ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்த இரண்டு பயங்கரவாதிகளின் வீடுகளையும் நேற்று பாதுகாப்பு படையினர் அதிரடியாக இடித்து தரைமட்டமாக்கினார்கள். தங்களது வீடு இடிக்கப்பட்டதால் கண்ணீர்மல்க செய்தியாளர்களிடம் பேசிய ஆதில் உசைனின் தாய் ஷெஹசாதா, ''எனது மகனுக்கு இந்த தாக்குதலுடன் தொடர்பு இருப்பதாக நான் நம்பவில்லை. ஆனால், தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இருந்தால், அவன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எங்கள் குடும்பம் எந்த விதத்திலும் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை. நானும் எனது இரண்டு பிள்ளைகளும் அவர்களின் குழந்தைகளும் வசிக்கும் வீட்டைத்தான் அதிகாரிகள் இடித்துத் தள்ளினர். இனி நாங்கள் எங்கு செல்வோம்? பாதுகாப்புப் படையினர் எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்'' என்று தெரிவித்தார். 

பஹல்காம் தாக்குதலுக்கு மூளை ஹபீஸ் சயீத்! உதவி செய்தது பாகிஸ்தான் உளவுத்துறை! பகீர் தகவல்!
 

34
Pahalgam Attack

வீடுகள் தகர்ப்பு 

முதுகலை பட்டதாரியான ஷெஹசாதா அருகிலுள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். வெடிமருந்துகளைப் பயன்படுத்தி இரண்டு பயங்கரவாதிகளின் வீடுகளும் இடிக்கப்பட்டன. அப்போது வீட்டில் யாரும் இல்லை. த்ரால் பகுதியைச் சேர்ந்த ஆசிஃப், பிஜ் பஹேரா பகுதியைச் சேர்ந்த ஆதில் உசைன் தோக்கர் ஆகியோரின் வீடுகளே இடிக்கப்பட்டன. 

லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு

இருவரும் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு வைத்திருந்ததாக ஏற்கனவே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்திருந்தன. பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களின் ஓவியங்களை காவல் துறையினர் வெளியிட்டனர். இதில் ஹாஷிம் மூசா என்ற சுலேமான் மற்றும் அலி பாய் என்ற தல்ஹா ஆகிய இருவர் பாகிஸ்தானியர்கள். மூன்றாவது நபர் தான் அப்துல் உசேன் தோகர். காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்கில் வசிப்பவர். 

44
Jammu kadhmir, India

உள்ளூர்வாசிகள் சிலர் ஆதரவு 

இந்த பயங்கரவாதிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மக்களை பொறுத்தவரை பயங்கரவாதத்துக்கு எதிராக மாநில அரசு மற்றும் மத்திய அரசுடன் ஒன்றுபட்டு நிற்கின்றனர். ஆனால் ஒரு சிலர் போராளி குழுக்கள் என்று கூறிக்கொண்டு பயங்கரவாதிகளுக்கு உதவி செய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. 

ஜம்மு-காஷ்மீரில் என்கவுண்ட்டர்! லஷ்கர் இ-தொய்பா தளபதி சுட்டுக் கொலை! ராணுவம் அதிரடி!

Read more Photos on
click me!

Recommended Stories