சோனம் வாங்சுக் பின்னணியில் பாகிஸ்தான் சதியா? லடாக் போலீஸ் பகீர் குற்றச்சாட்டு!

Published : Sep 27, 2025, 06:35 PM IST

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், வன்முறையைத் தூண்டியதாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாக லடாக் காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.

PREV
15
சோனம் வாங்சுக்

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி போராட்டம் நடத்திய பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், வன்முறையைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் மத்தியச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாக லடாக் காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) எஸ்.டி. சிங் ஜம்வால் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

25
பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி கைது

லே நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த டிஜிபி ஜம்வால், "சமீபத்தில், நாங்கள் ஒரு பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரியைக் (PIO) கைது செய்தோம். அவர் எல்லை தாண்டிய தகவல்களை அனுப்பியதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. அந்த அதிகாரி சோனம் வாங்சுக்குடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன" என்று வெளிப்படுத்தினார்.

மேலும், "சோனம் வாங்சுக் பாகிஸ்தானில் நடந்த 'டான்' (Dawn) நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் வங்கதேசத்துக்கும் சென்றுள்ளார். எனவே, அவர் மீது பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது" என்றும் ஜம்வால் தெரிவித்தார்.

35
சோனம் வாங்சுக் வன்முறையைத் தூண்டினாரா?

செப்டம்பர் 24 அன்று லே-யில் நடந்த வன்முறைச் சம்பவங்களுக்கு சோனம் வாங்சுக்கின் தூண்டுதலே காரணம் என்று டிஜிபி குற்றம் சாட்டினார். அந்த வன்முறையில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 80 பேர் காயமடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் லே-யில் உள்ள உள்ளூர் பாஜக அலுவலகத்தையும், சில வாகனங்களையும் தீ வைத்துக் கொளுத்தினர்.

"சோனம் வாங்சுக் தூண்டுதல் அளிப்பதில் ஒரு வரலாறு கொண்டவர். அவர் தனது பேச்சுகளில் அரபு வசந்தம், நேபாளம் மற்றும் வங்கதேசம் போன்ற போராட்டங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவரது தூண்டுதல் பேச்சுகளே லடாக்கில் வன்முறைக்கு வழிவகுத்தன," என்று ஜம்வால் கூறினார்.

45
பேச்சுவார்த்தையை சீர்குலைத்ததாக குற்றச்சாட்டு

மத்திய உள்துறை அமைச்சகமும் இந்த அமைதியின்மைக்கு சோனம் வாங்சுக்கின் "தூண்டுதல் பேச்சுகளையும்" பேச்சுவார்த்தையில் அதிருப்தி அடைந்த "அரசியல் உள்நோக்கம் கொண்ட" குழுக்களையும் காரணம் கூறியது. அரபு வசந்தம் மற்றும் நேபாள 'Gen Z' போராட்டங்களைப் பற்றி வாங்சுக் குறிப்பிட்டது, கோபமான கூட்டத்தைத் தூண்டி வன்முறையை ஏற்படுத்தியதாக உள்துறை அமைச்சகம் கூறியது.

55
வெளிநாட்டு நிதி பரிவர்த்தனை

"சோனம் வாங்சுக் தலைமையிலானவர்கள், மத்திய அரசுடன் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை செயல்முறைகளை சீர்குலைக்க முயன்றனர்," என்றும் டிஜிபி ஜம்வால் குற்றம் சாட்டினார். மேலும், சோனம் வாங்சுக்கின் அமைப்பு மேற்கொண்ட வெளிநாட்டு நிதிப் பரிவர்த்தனை குறித்தும் விசாரணை நடைபெறுவதாக அவர் கூறினார்.

லடாக் மாநில அந்தஸ்து கோரி உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக், வன்முறைக்கு பொறுப்பேற்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது லடாக் அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories